வைகைபுயலுக்கு கிடைத்த டாக்டர் பட்டம்! எதற்காக தெரியுமா?
நடிகர் வைகை புயல் வடிவேலுவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ள நிகழ்வு ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நகைச்சுவை மன்னன் வடிவேல்
முன்னணி நடிகர்களுடன் தனது நகைச்சுவையான நடிப்பினால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தவர் தான் நடிகர் வடிவேலு.
சமீபத்தில் சில பிரச்சினைகளை சந்தித்த இவர் சில காலம் சினிமாவில் நடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் அத்தருணத்தில் கூட மீம்ஸ்களால் மக்களை சிரிக்க வைத்தவர் தான் வடிவேலு.
தற்போது பிரச்சினை தீர்ந்து சினிமாவில் நடிக்க தொடங்கிய வடிவேலுகவிற்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றது. ஹீரோ கதாபத்திரத்தினை தவிர்த்து நகைச்சுவை, குணச்சித்திர வேடத்தில் கலக்கி வருகின்றார்.
அந்த வகையில் தற்போது வடிவேலு கைவசம் மாமன்னன் மற்றும் சந்திரமுகி 2 ஆகிய திரைப்படங்கள் உள்ள நிலையில், விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இப்படி சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுத்து கலக்கி வரும் வடிவேலுவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டு உள்ளது.
ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் தலைமையில் செயல்பட்டு வரும் சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமைகள் ஆணையம் சார்பில் வடிவேலுவுக்கு சிறந்த பொழுதுபோக்கு கலைஞருக்கான கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.
டாக்டர் பட்டம் பெற்ற வடிவேலுவுக்கு வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளன.