5 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்த வடிவேலு: நீதிமன்றம் மூலம் அவகாசம் கேட்ட சிங்கமுத்து
பிரபல யூடியூப் சேனல்களில் நடிகர் வடிவெலுவை பற்றி நடிகர் சிங்கமுத்து தவறாக பரப்பிய செய்திகளுக்கு வடிவேலு ஐந்து கோடி ரூபாய் நஷ்ட ஈடாக தர வேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளார்.
5 கோடி நஷ்டஈடு
யூடியூப் சேனல்களில் நடிகர் வடிவெலுவை பற்றி மிகவும் தரக்குறைவாக பேசிய நடிகர் சிங்கமுத்து ரூ.5 கோடி நஷ்டஈடு தனக்கு தர உத்தரவிடக் கோரி நடிகர் வடிவேலு தொடர்ந்த வழக்கு தொடர்பாக, நடிகர் சிங்கமுத்து 2 வாரங்களில் பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
இதை தொடர்ந்து சென்னை உயர் நீதி மன்னறத்தில் நடிகர் வடிவேலு மனுதாக்கல் செய்துள்ளார். அதில் நான் 300 படங்களில் நடித்துள்ளேன். எனது நகைச்சுவை காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.
சமூக வலைத்தளங்களில் எனது நகைச்சுவை காட்சிகள் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நடிகர் சிங்கமுத்துவும் நானும் கடந்த 2000-ம் ஆண்டு முதல் இணைந்து நடித்து வருகிறோம். நாங்கள் சேர்ந்து நடித்த படங்கள் பெரும் வெற்றி படங்களாக அமைந்தன.
இந்த சூழலில், எனது வளர்ச்சியை பார்த்து பொறாமை அடைந்த சிங்கமுத்து எனக்கு எதிராக செயல்பட ஆரம்பித்தார். இருவருக்கும் இடையே நிலம் தொடர்பான பிரச்னை ஏற்பட்டு, அந்த வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
viral video: 96 பட நடிகையா இது? நீச்சல் உடையில் அசத்தும் அழகு.. மின்னல் வேகத்தில் குவியும் லைக்குகள்
இந்நிலையில், நடிகர் சிங்கமுத்து கடந்த ஜனவரி முதல் மார்ச் வரை யூடியூப் சேனல்களில், என்னை மிகவும் தரக்குறைவாகப் பேசியுள்ளார். இதனால், எனக்கு ரசிகர்கள் மத்தியில் உள்ள நல்ல பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. எனக்கு மிகவும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.
எனவே, எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்த சிங்கமுத்து எனக்கு நஷ்டஈடாக ரூ.5 கோடி தருமாறு உத்தரவிட வேண்டும்” என்று கோரியுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றம் விசாரணை எடுத்தது.
இதில் சிங்கமுத்து இரண்டு வாரத்திற்குள் பதில் கூறுகிறேன் என அனுமதி பெற்றுள்ளார். இது சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.இதனையடுத்து இந்த வழக்கு இன்று விசாரணைக்கு மீண்டும் வந்தது.
இதில் பதில்மனு தாக்கல் செய்ய நடிகர் சிங்கமுத்து கோரினார். இதையடுத்து, நடிகர் சிங்கமுத்து தரப்பு கோரிக்கையை ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |