கோடிகளில் புரளும் விஜய்.. நீலாங்கரை வீட்டின் ஆடம்பரமும் மதிப்பும்
நடிகர் விஜய்யின் சென்னையில் உள்ள நீலாங்கரை வீட்டில் என்னென்ன ஆடம்பர வசதிகள் உள்ளன, அதன் இந்திய மதிப்பு எவ்வளவு ஆகிய விவரங்களை இணையத்தில் கசிந்துள்ளன.
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இருப்பவர் தான் நடிகர் விஜய்.
இவர், நடிப்பில் அடுத்து சனநாயகன் திரைப்படம் வெளியாகவுள்ளது.
இதற்கிடையில் நடிப்பில் ஆர்வமாக இருந்த விஜய் தற்போது அரசியலில் களமிறங்கியுள்ளார்.
அரசியல் பயணம் கடந்த சில மாதங்களாக நன்றாக சென்றுக் கொண்டிருந்த வேளையில், கரூர் சம்பவம் பெரிய அடியாக மாறியுள்ளது.
கரூர் சம்பவத்தை தொடர்ந்து விஜய் எங்கும் பெரிதாக வெளியில் வராமல் அவருடைய இல்லத்திலேயே இருந்து வருகிறார். தற்போது விஜய்யின் நீலாங்கரை இல்லம் பற்றிய தகவல்களை இணையவாசிகள் அதிகமாகி தேடி வருகிறார்கள்.
இவ்வளவு வசதிகளா?
இந்த நிலையில், விஜய்யின் சென்னை நீலாங்கரையில் உள்ள ஆடம்பர வீட்டின் அருகே கடற்கரை உள்ளது.
இது குறித்து வெளியான தகவலில், விஜய் ஒரு நாள் வெளிநாட்டில் உள்ள ஹாலிவுட் நைட்கர் டாம் க்ரூஸின் இல்லத்தை வெளியில் இருந்து பார்த்ததாகவும்.
அதே போன்று வீடு தானும் கட்ட வேண்டும் என விஜய் முடிவு செய்து கட்டியதாகவும் ஒரு கதை உள்ளது. இவ்வளவு பிரமாண்டமாக இருக்கும் வீட்டில் ஹால் பார்ப்பதற்கு அவ்வளவு அலங்காரத்துடன் இருக்குமாம்.
வீட்டின் உள்ளே ஹை சீலிங் பொருத்தப்பட்டுள்ளன, வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட லைட்ஸ் பொருத்தப்பட்டுள்ளது, வீட்டிற்கு உள்ளே பிரைவேட் ஜிம், வீட்டிற்கு வெளியே நீச்சல் குளம் உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், வீட்டிற்கு வெளியே Landscaped Gardens எனப்படும் பூங்கா, மரங்கள், புதர் மற்றும் புல்வெளிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை ஒழுங்குப்படுத்தி, நடப்பதற்கு இடம் விட்டு சரியாக பராமரிக்கப்பட்டுள்ளது. விஜய் அங்கு தான் அடிக்கடி தியானம் செய்வதாகவும் கூறப்படுகிறது.
கோடிகளில் பெறுமதி
சென்னையில் அரை சதுர அடியே பல ஆயிரக்கணக்கில் விற்பனை செய்யப்படும் இந்த நேரத்தில், இந்த ஆடம்பர பங்களா ரூ.70 முதல் 80 கோடி வரை பெறுமதி வாய்ந்தது எனக் கூறப்படுகிறது. ஆனாலும் துல்லியமான விலை விவரங்கள் வெளியாகவில்லை.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |