Ethirneechal: இன்னும் இது முடியல.. ஆவேசமாக பொங்கிய அன்புக்கரசி- ஆதரவு கொடுக்கப்போவது யார்?
எதிர்நீச்சல் சீரியலில் தர்ஷன்- பார்கவி திருமணம் பொலிஸ் பாதுகாப்புடன் நடந்து முடிந்தாலும் அன்புக்கரசி தன்னுடைய வாழ்க்கை தொலைத்து விட்டு, ஆவேசமாக பொங்கி எழும் காட்சி ரசிகர்களை கவலையடைய வைத்துள்ளது.
எதிர்நீச்சல் சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் தற்போது பரபரப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.
அந்த வகையில், தற்போது சீரியல் குணசேகரன் செய்த காரியத்தினால் ஈஸ்வரி மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.
இந்த சமயத்தை பயன்படுத்தி தர்ஷன்- அன்புக்கரிசி திருமணத்தை நடத்தி விடலாம் என திட்டம் போடுகிறார்.
இதனை தொடர்ந்து தர்ஷனனுக்கு மயக்க மருந்து கொடுத்து அன்புக்கரசிக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்ற முயற்சியில் அறிவுக்கரசி மருந்து கொடுத்து மயக்கத்தில் வைத்திருக்கிறார்.
தர்ஷனனின் நிலையை புரிந்து கொண்ட சக்தி மருத்துவர் ஒருவரை அழைத்து தர்ஷனின் மயக்கத்தை தெளிய வைக்கிறார்.
இந்த நிலையில், தற்போது சீரியலில் தர்ஷன் திருமணத்தை மையமாக வைத்து குணசேகரனுக்கும் வீட்டு மருமகள்களும் பலத்த சண்டை போடும் காட்சிகள் சென்றுக் கொண்டிருக்கின்றன.
பழிவாங்க அன்பு எடுத்த புதிய அவதாரம்
சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திய அறிவுக்கரசி, எப்படியாவது தன்னுடைய தங்கையான அன்புக்கரசிக்கு தர்ஷனனை திருமணம் செய்து வைத்து விடலாம் என பல சதி வேலைகளை செய்து வருகிறார்.
இப்படி சீரியலில் தர்ஷன் திருமணத்திற்காக உடைந்த குடும்பத்தினர் அதே காரணத்திற்காக ஒன்றாக சேர்ந்துள்ளனர்.
பார்கவி- தர்ஷன் திருமணம் பொலிஸ் பாதுகாப்புடன் நடந்து முடிந்துள்ளது. அதே சமயம் கனவுடன் காத்திருந்த அன்புக்கரசிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தன்னுடைய அக்காவை ஏமாற்றிய குணசேகரன் குடும்பத்தினரை பழிவாங்குவதற்காக அன்புக்கரசி எடுத்திருக்கும் அவதாரம் சின்னத்திரை ரசிகர்களை இன்னும் ஆர்வமாக்கியுள்ளது.
இதனை தொடர்ந்து அன்புக்கரசி,“ தன்னுடைய வாழ்க்கை இப்படியானதற்கு நான் யாரையும் சும்மா விட மாட்டேன்..” என்றும் கத்திச் சென்றுள்ளார்.
இப்படியாக இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |