Bigg Boss 9: பிக்பாஸ் வீட்டை குதூகல பூமியாக மாற்றிய கலையரசன்- குவியும் விமர்சனங்கள்
பிக்பாஸ் வீட்டிற்குள் கடைசி போட்டியாளராக சென்ற கலையரசன் ரம்யா ஜோ இடுப்பில் அமர்ந்து ஆட்டம் போட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களை கிளப்பியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 9
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாகும் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.
இந்த நிகழ்ச்சி இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஒளிபரப்பபட்டு வருகிறது.
கடந்த வாரம் மிகப் பிரமாண்டமாக ஆரம்பமான பிக்பாஸ் சீசன் 9-ல் முதல் போட்டியாளராக திவாகரன் வருகிறார்.
இதனை தொடர்ந்து அரோரா சின்கிளேர், எஃப்.ஜே, வி.ஜே. பார்வதி, துஷார், கனி, சபரி, பிரவீன் காந்தி, கெமி, ஆதிரை, ரம்யா ஜோ, கானா வினோத், வியானா, சுபிக்ஷா, அப்சரா, விக்கல்ஸ் விக்ரம், கம்ருதின், கலையரசன் ஆகிய பிரபலங்கள் களமிறங்கியிருக்கிறார்கள்.
அகோரி கலையரசன் பார்த்த வேலை
இந்த நிலையில், பிக்பாஸ் சீசன் 9 ஆரம்பமான நாள் முதல் போட்டியாளர்கள் உள்ளே பிரச்சினைகள் ஓயவில்லை. தினம் தினமும் ஏதாவது பிரச்சினை வந்துக் கொண்டே இருக்கின்றன.
இதற்கிடையில் பிக்பாஸ் வீட்டில் கடைசி போட்டியாளராக உள் நுழைந்த கலையரசன் ரம்யா ஜோ இடுப்பில் ஏறி அமர்ந்து குழந்தை போன்று செய்து காட்டிய காணொளி இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது.
அவர் இடுப்பில் ஏறி அமர்ந்து மற்ற போட்டியாளர்களையும் அழைத்து தான் இடுப்பில் இருப்பதாகவும் சைகை செய்து காட்டியிருக்கிறார்.
இதனை தொடர்ந்து வீட்டில் தண்ணீர் பிரச்சினை பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. கம்ருதின் செய்த வேலையால் மற்ற போட்டியாளர்களும் தண்ணீர் இல்லாமல் அமர்ந்திருக்கிறார்கள்.
இது குறித்து ஆதிரை பேசும் பொழுது, “ எனக்கு தண்ணீர் வேண்டும், அதனால் நான் பேசுவேன்..” எனக் கூறுகிறார்.
இப்படியாக இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |