புதிய தொழில் தொடங்கப்போகும் நடிகர் சூர்யா - கோடியில் கொட்டப்போகும் வருமானம்?
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா அண்மையில் இவர் நடித்திருந்த சூரரை போற்று படத்திற்கு தேசிய விருது கிடைத்திருந்தது. மொத்தமாக இந்த படத்திற்கு 5 விருதுகளை சூரரை போற்று திரைப்படம் தட்டி தூக்கியது.
அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்த சூர்யா கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்போது பாலா இயக்கத்தில் உருவாகி வரும் வணங்கான் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள வாடிவாசல், ஜெய் பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ஒரு பட சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படம் என அடுத்தடுத்த படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய தொழில்
இந்நிலையில், தற்போது நடிகர் சூர்யா புதிய தொழிலிலை சூர்யா தொடங்க இருக்கிறாராம். அதாவது, தெலுங்கு நடிகர்களைப் போல நடிகர் சூர்யா தமிழகத்தில் 5 திரையரங்குகளை லீசுக்கு எடுக்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதன் மூலம் அவருடைய வருமானம் பல மடங்கு அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.