விக்ரம் படத்தில் 5 நிமிடத்திற்கு சூர்யா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? தீயாய் பரவும் ஷாக்கிங் தகவல்
நடிகர் கமலின் விக்ரம் படத்திற்காக சூர்யா வாங்கிய சம்பளம் குறித்த தகவல்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
விக்ரம் படம் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
கமலின் ராஜ்கமல் தயாரிப்பில் உருவான இந்தப்படம் வசூலிலும் மிகப்பெரிய சாதனையை படைத்து வருகிறது.

மேலும் ‘விக்ரம்’ படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் 40 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
உலகம் முழுவதும் இரண்டு நாளில் கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் வசூலை கடந்து விட்டது.
வில்லனாக மிரட்டிய சூர்யா
இந்த படத்தில் கடைசி ஐந்து நிமிடங்கள் வரும் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா மிரட்டியிருந்தார்.
திரையரங்குகளில் அவரது இந்த காட்சிகளை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர்.
Time for #Rolex ?
— R_O_L_E_X ? (@amjith_akl) June 5, 2022
Sorry #RolexSir ??@Suriya_offl#Vikram pic.twitter.com/w5NkXI8N42
சூர்யா வாங்கிய சம்பளம்
ஐந்து நிமிடங்களே வரும் இந்த காட்சியில் நடிப்பதற்காக சூர்யா எந்தவித சம்பளமும் வாங்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
கமலுடனான நட்புக்காக சூர்யா நடித்திருக்கின்றார்.
அண்மையில் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் உலகநாயகனுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி கூறி சமூகவலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் நட்புக்காக கோடிக்கணக்கில் வசூலில் வேட்டையாடும் விக்ரம் படத்திற்கு சம்பளமே வாங்காமல் நடித்திருப்பது ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சி தகவல் தான்.
இருந்தாலும் சூர்யாவின் இந்த செயலை ரசிக்கள் பாராட்டி வருகின்றனர்.

