srikanth open talk: சினேகாவுக்கு நடந்த Accident- இரத்த வெள்ளத்தில் கிடந்த கார்
நடிகை சினேகாவிற்கு நடந்த கார் விபத்து பற்றி ஸ்ரீகாந்த் மிகவும் உருக்கமாக பேசியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சினிமா பயணம்
தமிழ் சினிமாவில் 2000 காலப்பகுதியில் மிகவும் பிரபலமாக இருந்த நடிகை தான் சினேகா.
இவர் 2001 ஆம் ஆண்டு “இங்கே ஒரு நீலப்பக்சி” என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானார்.
பின்னர் அதே வருடத்தில் என்னவளே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார். அந்த காலப்பகுதியில் முன்னணி நடிகர்களாக இருந்த அனைத்து ஹீரோக்களுடனும் நடித்து விட்டார்.
இதனிடையே நடிகர் பிரசன்னாவை சினேகா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகளும் இருக்கிறார்கள். ஹீரோயினாக நடிக்கும் மார்க்கெட் இல்லையென்றாலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
அந்த வகையில், இன்னும் சில நாட்களில் திரைக்கு வரவிருக்கும் விஜய்யின் கோட்பாடத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.
ரத்த வெள்ளத்தில் சினேகா
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியொன்றில் நடிகர் ஸ்ரீகாந்த் சினேகா பற்றி வியப்பான ஒரு சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.
அதில், “ சினேகாவுடன் இணைந்து “ஏப்ரல் மாதத்தில்” என்ற படத்தில் நடித்து கொண்டிருந்தேன். அப்போது எனக்கும் சினேகாவிற்கும் விபத்து ஏற்பட்டு விட்டது. நாங்கள் இருவருமே மருத்துவமனைகளில் இருந்து வந்து தான் திரைப்படத்தை முடித்தோம்.
என்னை விட சினேகாவின் விபத்தை நினைக்கும் போது பயங்கரமான இருக்கும். சினேகாவின் கார் விபத்து ஏற்பட்டு அவர் ரத்தவெள்ளத்தில் இருந்தார். அவருடைய முதுகெலும்பு உடைந்து போய் இருக்கும்.
அவரை காப்பாற்றுவதற்காக கார் கதவுகளை திறந்தால் திறக்க முடியாமல் இருந்தது. கண்ணாடிகள் எல்லாம் நொருங்கி விட்டன. இந்த சம்பவம் என்னால் எப்பவும் மறக்க முடியாது.” என பேசியிருக்கிறார்.
இந்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. “ சினேகாவுக்கு இப்படியொரு விபத்தா?” என நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |