கோடிகளில் புரளும் அம்பானி குடும்பம்- ஒரு wrist watch இத்தனை லட்சமா?
ஆனந்த் அம்பானி கையில் கட்டியிருக்கும் கைக்கடிக்காரத்தின் பெறுமதி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
ஆனந்த் அம்பானி
ரிலையன்ஸ் குழும தலைவரும் மிகப்பெரிய கோடீஸ்வரருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் தான் ஆனந்த் அம்பானி.
இவர் எதிர்வரும் 12 ஆம் திகதி ராதிகா மெர்ச்சன்ட் என்பவரை திருமணம் செய்யவுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் பிரமாண்டமாக நடந்து கொண்டிருக்கின்றன.
இதனை தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆனந்த் அம்பானி, மகாராஷ்டிர- நெரல் பகுதியில் உள்ள கிருஷ்ணகாளி கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார்.
அங்கு ஆனந்த் அம்பானி ஹவானி விழா நடத்தி திருமணத்திற்கான கடவுளின் ஆசியைப் பெற்றார்.
ரிச்சர்ட் மில்லேயின் விலை
இந்த நிலையில் கோயிலுக்கு சென்ற ஆன்ந்த் அம்பானி கையில் உயர் ரக கைக்கடிகாரமொன்றை அணிந்திருந்தார். இது தொடர்பான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
அந்த வகையில், ஆனந்த் அம்பானி “ரிச்சர்ட் மில்லே” எனப்படும் கைக்கடிகாரத்தை தான் அணிந்திருந்தார்.
இதன் விலை இந்திய ரூபாயிக்கு ரூ.6.91 கோடி வரும் என கூறப்படுகின்றது.
ரிச்சர்ட் மில்லேயின் அபூர்வமான இந்தக் வாட்ச் இதுவரை 18 மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளன. அதில் ஒன்றை ஆனந்த் அம்பானி அணிந்திருக்கிறார்.
ரூ.18 கோடி மதிப்புள்ள கைக்கடிகாரம்
அதே போல் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குஜராத் ஜாம் நகரில் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டத்தின் போது ஆனந்த் அம்பானி ரூ.18 கோடி மதிப்புள்ள கைக்கடிகாரம் ஒன்றை அணிந்திருந்தார்.
இதனை பேஸ்புக் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க் மற்றும் அவரது மனைவி இருவரும் பார்த்த வியந்து போன சம்பவம் சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியாகி வைரலானது.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், “ வாட்ச்சிற்கே இப்படியா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |