கும்கி பட நடிகர் ஸ்ரீஜித் ரவிக்கு ஓராண்டு சிறைத் தண்டனை! நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு
Malayalam Actor Sreejith Ravi Sentenced to One Year in Prison : ‘கும்கி’ படத்தில் நடித்த மலையாளத் திரைப்பட நடிகர் ஸ்ரீஜித் ரவிக்கு சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வழக்கில் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து திருச்சூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அத்துடன், அவருக்கு ரூ.50,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
சிறுமிகளிடம் அத்துமீறல்
கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம், கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள அய்யந்தோள் பகுதியில் இரண்டு சிறுமிகளிடம் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகப் பொலிஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது.

காரில் வந்த நபர் சிறுமிகளிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதாகக் கூறப்பட்ட இந்தச் சம்பவம் தொடர்பாகப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர். சிசிடிவி காட்சிகள் மூலம் அடையாளம் காணப்பட்ட நடிகர் சம்பவம் இடம்பெற்ற பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமராக்களின் காட்சிகளைப் பொலிஸார் ஆய்வு செய்தனர்.
இதன் மூலம் சம்பவத்துடன் தொடர்புடையவர் மலையாள நடிகர் ஸ்ரீஜித் ரவி என்பது தெரியவந்துள்ளது.இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு, வழக்கு தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு
நீண்டகாலமாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், நடிகர் ஸ்ரீஜித் ரவிக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ரூ.50,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு நடிகருக்கு ஒரு மாத கால அவகாசத்தை நீதிமன்றம் வழங்கியுள்ளது. அதுவரை அவருக்குப் பிணையும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |