பல ஹொட்டல்கள்! நடிகர் சூரியின் சொத்து மதிப்பு என்ன தெரியுமா?
தற்போதைய சூழலில் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராகிவிட்டார் சூரி.
சின்னத்திரை சீரியலில் திரைப்பயணத்தை தொடங்கிய சூரி, பல போராட்டங்களுக்கு மத்தியில் பெரிய திரையில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.
பெரியதிரை பயணம்
முதன்முதலில் இவர் அறிமுகமானது “வெண்ணிலா கபடி குழு” படத்தில் தான், அந்த படத்தில் பரோட்டோ கொமெடியில் நடித்தததன் மூலம் பரோட்டோ சூரி என்றே அறியப்படுகிறார்.
தமிழில் முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய், அஜித், சூர்யா என அனைவருடனும் சேர்ந்து நடித்து விட்டார்.
தொடர்ந்து கொமெடி கதாபாத்திரத்தில் நடித்து வந்த சூரி தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார்.
தொழிலதிபர் சூரி
சினிமா ஒருபுறம் இருந்தாலும், சொந்த ஊரான மதுரையில் பல உணவகங்களை நடத்தி வருகிறார்.
அதுவே அரசு மருத்துவமனை வளாகத்தில் குறைந்தவிலையில் உணவை வழங்கி கஷ்டப்படும் மக்களுக்காக நடத்தி வருகிறார்.
இதுதவிர நிஜ வாழ்க்கையிலும் உதவி என்று அவரை நாடி வரும் பலருக்கும் உதவி வருகிறாராம் சூரி.
இந்நிலையில் இவருக்கு 40 கோடிக்கும் மேல் சொத்து இருக்கும் என கூறப்படுகிறது.