டைனோசர் காலத்துக்கு முன்பிருந்தே உயிர் வாழும் கடல் உயிரினங்கள்- அசந்து போவீங்க
டைனோசர் காலத்திற்கு முன்னர் இருந்து வாழும் உயிரினங்கள் சில இன்றும் உயிர்வாழ்கின்றன.
மில்லியன் கணக்கான வருடங்களை கடந்து கிரகம் (Planet) வந்திருந்தாலும் பல வகையான மாற்றங்களைச் சந்தித்து வந்தாலும் சிறிதும் பாதிக்கப்படாமல் இருக்கின்றன.
அந்த வகையில், டைனோசர் காலத்திற்கு முன்பிலிருந்து உயிர் வாழும் உயிரினங்கள் என்னென்ன என்பதை பதிவில் பார்க்கலாம்.
ஜெல்லி ஃபிஷ் (Jellyfish) | சுமாராக 500 மில்லியன் வருடங்களுக்கு முன்பு இருந்து வாழும் உயிரினங்களில் ஜெல்லி ஃபிஷ் முதல் இடத்தை பிடிக்கிறது. இதற்கு உடலில் எலும்புகள் மற்றும் மூளை இரண்டும் கிடையாது. பூமியின் பல வகையான உயிரினங்கள் அடியோடு அழிவை சந்தித்த போதும் ஜெல்லி ஃபிஷ் வகைகள் எந்தவித பாதிப்பும் இல்லாமல் உயிர் வாழ்கின்றன. |
நாட்டிலஸ் (Nautilus) | வெப்ப மண்டல இந்தோ-பசிபிக் கடற் பகுதிகளை பூர்வீகமாக கொண்ட உயிரினங்களில் நாட்டிலஸ் உயிரினமும் ஒன்று. வளைவுகளாலான ஓடுடுடைய நாட்டிலஸ், கடந்த அரை பில்லியன் ஆண்டுகளில் நீந்துவதற்கு ஜெட் உந்து விசையை (Jet Propulsion) பின்பற்றி வருகின்றன. இந்த உயிரினத்தின் புதை வடிவங்கள் (Fossils) சுமாராக 500 மில்லியன் வருடங்களுக்கு முன்பு இருந்து வாழ்கின்றன. பழமையான உயிரினங்களில் ஒன்றாக உள்ளது என ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. |
ஸ்பான்ஞ்சஸ் (Sponges) | கண்டுபிடிக்கப்பட்ட அனிமல் குழு உயிரினங்களில் ஸ்பான்ஞ்சஸ்கள் பழமை வாய்ந்தவையாகும். சுமாராக 600 மில்லியன் வருடங்களுக்கு முந்தைய புதை வடிவங்கள் கொண்ட கடல்வாழ் உயிரினமான இருந்தாலும், இதற்கு மிகச் சாதாரண உடலமைப்பை தான் இருக்கிறது. உலகம் முழுவதிலும் உள்ள அனைத்துக் கடல்களிலும் இவை செழித்தோங்கி சிறப்பாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அநேக உயிரினங்களின் வாழ துவங்கும் முன்பே ஸ்பான்ஞ்சஸ் கிளைகள் பரவ ஆரம்பிமாகியுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. |
கோலகாந்த்ஸ் (Coelacanths) | கோலகாந்த்ஸ் சுமாராக 400 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றன. கடந்த 1938ம் ஆண்டு வரை முற்றிலும் அழிந்து விட்டதாக கூறப்பட்ட வேளையில், புதை படிவ மீன்களாக மக்களால் நம்பப்பட்டு வந்தன. கடந்த 1938ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவின் கிழக்குக் கடற்கரையில் உயிருள்ள ஒரு கோலகாந்த்ஸ் மீன் பிடிக்கப்பட்டது. மூதாதையர்களின் புதை படிவத்தை ஒத்திருப்பதால் இதை மக்கள், ‘வாழும் புதை படிவம்’ என அழைக்கிறார்கள். |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |