Astrology: மூளையே இல்லாதது போல் அடிமுட்டாளாக இருக்கும் ராசியினர்.. உங்க ராசியும் இருக்கா?
ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களுக்கும் தனிப்பட்ட குணங்கள் இருக்கும்.
அதே சமயம் அந்த குணங்கள் சிலருக்கு பலமாகவும், சிலருக்கு பலவீனமாகவும் இருக்கும்.
அப்படி பலவீனமாக இருக்கும் அந்த குணம் அவர்களிடம் இருக்கும் நல்ல விடயங்களை மறைந்து சமூகத்தில் மோசமானவர்களாக காட்டும்.
இது அவர்களுக்கு துரதிஷ்டத்தையும் கொண்டு வரலாம். அப்படித்தான் சில ராசிக்காரர்கள் அவர்களிடம் இருக்கும் ஒரு மோசமான குணத்தால் சமூகத்தில் முட்டாளாக பார்க்கப்படுகிறார்கள்.
அவர்கள் முட்டாள் இல்லை என பலரும் கூறினாலும் அவர்களின் செயல்பாடுகள் அவர்களை காட்டிக் கொடுத்து விடும்.
அந்த வகையில், எந்தெந்த ராசியில் பிறந்தவர்கள் முட்டாள்தனமான செயல்களை செய்வார்கள் என்பதை பதிவில் பார்க்கலாம்.
சிம்மம் | சிம்ம ராசியில் பிறந்தவர்கள் பலவீனமாக இருப்பதற்கு அவர்களின் ஈகோ தான் காரணம். கவனம் மற்றும் ஆதிக்கத்தால் அதிகமாக ஈர்க்கப்படுவார்கள். அதிகாரத்தின் மீது இருக்கும் வெறித்தனம் நடத்தையில் முட்டாள்த்தனமாக காட்டும். நெறிமுறையற்றவர்களாக நடந்து கொள்வார்கள். அதிகார போதையில், பல முட்டாள்த்தனமாக வேலைகளை செய்வார்கள். இந்த செயல்களால் அவர்கள் மீதுள்ள மதிப்பு இல்லாமல் போகும். அவர்களிடம் ஈகோ அதிகமாக இருந்தால், அவர்கள் சில சமயங்களில் மந்தமாக செயல்படுவார்கள். அவர்களிடம் தற்பெருமை அளவுக்கு அதிகமாக இருக்கும். |
கடகம் | கடக ராசியில் பிறந்தவர்கள் முட்டாள்த்தனமாக இருப்பதற்கு அவர்களின் அதிகமான சிந்தனை தான் காரணம். அனைத்து விடயங்களிலும் உணர்ச்சிவசப்படுபவர்கள். அவர்களை சுற்றி நடக்கும் விடயங்களை தனிப்பட்ட முறையில் எடுத்து கொண்டு அது குறித்து சிந்தித்து கொண்டிருப்பார்கள். உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். குழப்பமான செயல்பாடுகள் எந்தவொரு விஷயத்தையும் நேரம் சென்ற பின்னரே செய்ய வைக்கும். உணர்வுகள் அவர்களுக்கு பலமாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளமாட்டார்கள். எப்போது பகுத்தறிவுடன் செயல்படுகிறார்களோ அப்போது தான் அவர்களின் வெற்றி கதவு திறக்கும். |
துலாம் | துலாம் ராசியில் பிறந்தவர்கள் தவறுகள் அதிகமாக செய்யமாட்டார்கள். எந்தவொரு சூழ்நிலைகளை தைரியத்துடன் எதிர்கொள்ளும் உறுதி இல்லாதவர்களாக இருப்பார்கள். இதுவே அவர்களின் வெற்றிக்கு தடையாக இருக்கும். அனைவரையும் நல்லவர்களாக பார்க்கும் குணம் அவர்களின் பகுத்தறிவை மறைக்கிறது. அவர்களின் இந்த கண்ணோட்டம் அவர்களை வாழ்க்கையில் எந்த முன்னேற்றத்தையும் கொண்டு வராது. பயம் மற்றும் குற்ற உணர்வு காரணமாக பல்வேறு முட்டாள்தனமான காரியங்களை தொடர்ந்து செய்கிறார்கள். |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).