கொரோனா பாதிப்பால் உதவிக்கேட்டு நடிகர் சோனு சூட்டிற்கு குவியும் மெசேஜ்! அவரே வெளியிட்ட வீடியோ
சினிமாவில் வில்லன் நடிகராக தோன்றிவரும் ஹிந்தி நடிகர் சோனு சூட், நிஜ வாழ்வில் பலருடைய வாழ்வில் மறக்கமுடியாத கதாநாயகனாக மாறியுள்ளார்.
இவர் செய்த உதவி மக்கள் இன்று வரை மறக்காமல் உள்ளனர். கொரோனா ஆரம்பத்தில் பொதுமுடக்கம் காரணமாக சொந்த ஊர் செல்ல முடியாத புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வாகன வசதிகள், உணவுகள் ஏற்படுத்திக் கொடுத்தது,
பின்தங்கிய மக்களின் குழந்தைகளுக்கு கல்விக்கு உதவியது என தன்னுடைய சேவையை அவர் தொடர்ந்து செய்து வந்தார். இந்நிலையில், கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்த நடிகர் சோனு சூட் அலைபேசிக்கு உதவிகள் கேட்டு மெசேஜ்கள் குவிந்துள்ளன.
இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ள சோனு சூட் “உதவிக் கேட்டவர்களை தொடர்புகொள்ள முடிந்தவரை முயற்சிக்கிறோம். தாமதம் ஏற்பட்டால் மன்னியுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
We are trying our best to reach out to you. If there are delays or we miss out.
— sonu sood (@SonuSood) April 28, 2021
Then pardon me..Apologies? pic.twitter.com/4NvjrnZ4zP