லட்சத்தில் இருந்து கோடிக்கு எஸ்.ஜே. சூர்யாவின் சொத்து மதிப்பு- எவ்வளவு தெரியுமா?
நடிகர் எஸ்.ஜே. சூர்யாவின் சொத்து மதிப்பு விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
எஸ்.ஜே. சூர்யா
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் எஸ்.ஜே. சூர்யா.
திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்த எஸ்.ஜே. சூர்யா, நடுத்தர குடும்பத்தில் வளர்ந்து வந்தார்.
ஆரம்ப காலங்களில் ஹோட்டலில் வேலை பார்த்துக் கொண்டே சினிமா படிப்பை முடித்தார். ஹீரோவாக சினிமாவில் அறிமுகமாக ஆசைப்பட்ட இவர், சில நிதி நெருக்கடியால் உதவி இயக்குனரானார்.
குறைந்த சம்பளத்தில் வாலி திரைப்படத்தில் பணியாற்றினார். அதன் பின்னர், குஷி திரைப்படத்திற்கு லட்சக்கணக்கில் சம்பளம் பெற்றுள்ளார். நடிகராக மாறிய எஸ்.ஜே. சூர்யா, 'நியூ' படத்தை இயக்கி, தயாரித்து, நடித்திருந்தார்.
ஹீரோவாக நடித்த படங்கள் வெற்றி பெறாத காரணத்தினால் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். அப்படி இவர், நடிப்பில் வெளியான இறைவி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து, ஸ்பைடர், மெர்சல் ஆகிய படங்களில் கதாநாயகருக்கு டப் கொடுக்கும் வில்லனாக நடித்துள்ளார்.
சொத்து மதிப்பு விவரங்கள்
இந்த நிலையில், இறைவி படத்திற்குப் பின் கோடிகளில் சம்பளம் வாங்கும் எஸ்.ஜே. சூர்யா, தற்போது ஒரு படத்திற்கு 5 முதல் 7 கோடி வரை சம்பளம் பெறுகிறார்.
சென்னை மற்றும் சொந்த ஊரில் சொத்துகள், சொகுசு கார்கள் வைத்திருக்கும் எஸ்.ஜே. சூர்யாவின் சொத்து மதிப்பு 150 கோடி எனக் கூறப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |