சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக இறங்கிய மகன்- கடைசியில் வெற்றி பெற்றது யார்?
சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக இறங்கிய மகனின் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சிவகார்த்திகேயன்
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து இன்று அனைவராலும் கொண்டாடப்படும் நடிகராக மாறியிருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன்.
இவர், நடிப்பில் கடைசியாக வெளியான அமரன் திரைப்படம் ப்ளாக் பஸ்டர் வெற்றியை கொடுத்தது. அதில் சாய் பல்லவியின் நடிப்பு மக்கள் மத்தியில் மிக பிரபலமாக பேசப்பட்டது.
உலகளவில் ரூ. 340 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை செய்த இந்த திரைப்படம் நாட்டிற்காக உயிரையே கொடுத்த இராணுவ வீரனின் கதையாகும்.
இப்படத்தின் வெற்றிக்கு பின்னர் சிவகார்த்திகேயன் மார்க்கெட் உச்சத்தை தொட்டு விட்டது. தற்போது கைவசம் எஸ்கே 23 மற்றும் பராசக்தி என இரண்டு திரைப்படங்களை வைத்திருக்கிறார். இந்த இரண்டு திரைப்படங்களின் படப்பிடிப்பும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மகனுடன் போட்டி போடும் சிவகார்த்திகேயன்
இந்த நிலையில், குகனுடன் உடற்பயிற்சி செய்யும் காணொளியை சிவகார்த்திகேயன் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.அந்த காணொளியில், அப்பாவுடன் உடற்பயிற்சி செய்து, இறுதியாக மகன் வெற்றிப் பெறுகிறார்.
இந்த காணொளி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்த ரசிகர்கள், “மகனின் சுட்டித்தனத்திற்கு அளவே இல்ல போலயே..” என நகைக்கும் வகையில் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |