நயனை வைத்து விக்னேஷ் சிவனை கலாய்த்த ஷாருக்கான்; விமர்சகர்கள் கையில் சிக்கிய டுவிட்டர் பதிவு!
நயன்தாரா விடயத்தில் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என ஷாருக்கான் மறைமுகமாக விக்னேஷ் சிவனை எச்சரித்துள்ளார்.
நயன்தாரா மற்றும் ஷாருக்கான் நடிப்பில் 'ஜவான்' திரைப்படம் செப்டம்பர் மாதம் 7ம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
நேற்றைய தினம் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இதற்காக திரைப்படத்தை பாராட்டி விக்னேஷ்சிவன் டுவிட்டர் பாராட்டு செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.
வைரல் பதிவு
இந்த நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக ஷாருக்கான் நயன்தாராவிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள் என குறிப்பிட்டு விக்னேஷ் சிவனுக்காக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
மேலும் அந்த பதிவில்,“நயன்தாரா அருமையானவர். ஆனால் இதை நான் யாரிடம் சொல்கிறேன்... உங்களுக்கு முன்பே தெரியும்! ஆனால், அவர் இப்போது நன்றாக அடிக்கவும் உதைக்கவும் கற்றுக் கொண்டுள்ளார். ஜாக்கிரதையாக இருங்கள்! ” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
@VigneshShivN thank u for all the love. #Nayanthara is awesome…but oh who am I telling this…you toh already know!!! But Hubby, beware, she has now learnt some major kicks & punches!! pic.twitter.com/5aMZ8rzReN
— Shah Rukh Khan (@iamsrk) July 12, 2023
இந்த பதிவு சற்று நகைக்கும் விடயமாக இருப்பதால் நயன் ரசிகர்கள் குறித்த பதிவை ட்ரெண்ட்டாக்கி வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |