விபத்தில் சிக்கிய நடிகர் ஷாருக்கான்... தற்போதைய நிலை என்ன?
பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வரும் ஷாருக்கான் படப்பிடிப்பிற்காக அமெரிக்கா சென்று விபத்தில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ஷாருக்கான்
பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஷாருக்கான். தற்போது அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்து வரும் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.
இப்படத்தின் வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ள நிலையில், செப்டம்பர் 7ம் தேதி வெளியாகியுள்ளது. வரும் 7ம் தேதி படத்தில் ட்ரைலரும் வெளியிட உள்ளதாக கூறப்படுகின்றது.
இப்படத்தினை தொடர்ந்து தன்னுடைய அடுத்த பட பணிகளுக்காக அமெரிக்கா சென்றுள்ள ஷாருக்கான் அங்கு எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியுள்ளதாகவும், மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளதாகவும் தற்போது தகலவ் வெளியாகி அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தற்போது இந்தியா திரும்பியுள்ள நிலையில், வீட்டில் இருந்து குணமடைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த விபத்து குறித்து ஷாருக்கான் தரப்பிலிருந்து எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.
ஆனாலும் ஊடகங்களில் வெளியான செய்தியை பார்த்த மக்கள் அவருக்காக பிரார்த்தனை செய்தும் வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |