கட்டு, பிட்டு என நகைச்சுவையாக பேசிய சதீஷ்.. அவர் கொடுத்த ஒரு எச்சரிக்கை - என்ன தெரியுமா?
பாடசாலை நிகழ்வில் கட்டு, பிட்டு என நடிகர் சதிஷ் பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்படுகின்றது.
சதீஷ்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் சதீஷ்.
இவர் பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து பின்னர் சினிமாவிற்குள் வந்தவர்.
நடிகர் சதீஷ் விஜய், சிவகார்த்திகேயன் என முன்னணியில் இருக்கும் நடிகர்களுடன் காமெடி நடிகராக நடித்து பிரபலமாகினார்.
தற்போது கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நடிகர்களில் ஒருவராக வலம் வந்துக் கொண்டிருக்கிறார்.
மாணவர்களுக்கு கொடுத்த அறிவுரை
இந்த நிலையில் பிரபல பாடசாலையொன்றில் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்குவதற்காக நடிகர் சதீஷ் சென்றுள்ளார்.
நிகழ்ச்சியில் பேசும் பொழுது, "கல்லூரி படிக்கும் மாணவர்கள் 'கட்' அடிக்கலாம் 'பிட்' அடிக்கலாம். ஆனால் காதலில் விழுந்துவிட வேண்டாம்.
இது பள்ளி பருவம் நான் என்னுடைய வேலையில் கவனமாக இருந்த காரணத்தினால் தான் உங்களுக்கு முன் மாதிரியான இருக்கேன். ஆகையால் படிப்பில் அதிக கவனம் செலுத்துங்கள்..” என பேசியுள்ளார்.
இந்த செய்தியை கேட்ட இணையவாசிகள்,“ பள்ளி மாணவர்களுக்கு இது கூற வேண்டிய அறிவுரை தான்..” என சதீஷிற்கு சார்பாக பேசியுள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |