மாயாவை வெளுத்து வாங்கிய கமல்.. அவமானத்தால் தலைகுனிந்த முக்கிய போட்டியாளர்!
மாயாவை வெளுத்து வாங்கிய கமலின் வீடியோ நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பிக்பாஸ் 7
நாம் ஆவலுடன் எதிர்பார்த்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சி ஆரம்பமாகி தற்போது 50 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது.
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் அரண்மனை டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில நிக்ஷன் அரசராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மற்ற வாரங்கள் போல் அல்லாமல் இந்த வாரம் கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய நிக்ஷன் சர்வதிகார ஆட்சி முறை என்றால் என்ன? என்பதனை மக்களுக்கு செய்து காட்டி வருகிறார்.
பிரதீப் விடயத்தில் பிளவுப்பட்ட போன மாயா - விசித்திரா இருவரும் பூகம்பம் டாஸ்க் மூலம் ஒன்றாக இணைந்து விட்டார்கள்.
இதனால் பூர்ணிமா கடந்த இரண்டு தினங்களாக தனிமையில் இருந்து சில வேலைகளை பார்த்து வருகிறார்.
வெளுத்து வாங்கிய கமல்
இந்த நிலையில் இந்த வாரம் புல்லிங் கேங் விடுதலையடைந்துள்ளது எனவும் கூறலாம்.
அந்த வகையில் நிக்ஷனின் தலைமைத்துவத்திற்கு எதிராக கிளம்பிய மாயா கமல் கேட்டதும் சார்பான கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
கடந்த வாரங்களில் எபிசோட் பார்த்த கமல் மாயாவின் பேச்சால் கடுப்பாகியுள்ளார். மாயாவை கலாய்க்கும் வகையில் சில கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இதனால் கடுப்பான மாயா கோபத்தின் உச்சியில் தலைகுனிந்தப்படி என்ன பதில் கூறுவது என தெரியாமல் நின்றுக் கொண்டிருந்தார்.
பிக்பாஸ் வீட்டில் எப்படி இருந்தாலும் சனிக்கிழமையில் கமல் வரும் போது அர்ச்சனா உச்சமாகியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |