படுத்த படுக்கையாக கிடக்கும் நடிகர்! வீட்டில் நடந்தது என்ன? குழப்பத்தில் மருத்துவர்கள்
முத்து திரைபட நடிகர் சரத்பாபு தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து பொது சிகிச்சை பிரிவிற்கு மாற்றிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்படுகிறது.
சினிமா வாழ்க்கை
தமிழ் சினிமாவில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமாகியவர் தான் நடிகர் சரத்பாபு.
இவர் அதிகப்படங்களில் நடிகர் ரஜினிகாந்துடன் தான் நடித்துள்ளார். இதனால் இவருக்கும் தமிழகத்திற்கு ரசிக பட்டாளம் இருக்கிறது.
ஆந்திராவைச் சேர்ந்த நடிகர் சரத்பாபு கடந்த 1973ம் ஆண்டு “ராம ராஜ்ஜியம்” என்ற தெலுங்கு படத்தில் சினிமா பயணத்தை துவங்கினார்.
இந்த நிலையில் தற்போது 71 வயதான சரத்பாபு இதுவரை சுமார் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
அதிரடியாக பொது சிகிச்சை பிரிவிற்கு மாற்றம்
இதனை தொடர்ந்து நடிகர் சரத்பாபு உடல்நிலை சரியில்லாமல் கடந்த தினங்களில் ஹைதராபாத்திலுள்ள அவரின் வீட்டில் இருந்து வந்துள்ளார்.
அப்போது சரத்பாபுவின் உடல் நிலை திடீரென சரியில்லாமல் போயுள்ளது. இதனை தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.
இவரின் நிலையை அறிந்த மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சையளித்துள்ளார்கள்.
இவரின் இந்த நிலைக்கு என்ன காரணம் என மருத்துவர்கள் விசாரித்து வருவதுடன், உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் சரத்பாபுவை பொது சிகிச்சை பிரிவிற்கு மாற்றியுள்ளார்கள்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள்,“ எங்க எஜமானுக்கு என்னாச்சி” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்.