சட்டமன்றத்தில் முதல்வரின் சைகை... ஜனநாயகன் ப்ரொமோவிலும் வந்ததால் பரபரப்பு
முதல்வர் விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் ப்ரொமோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
ஜனநாயகம்
ஹெச், வினோத் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் உருவான ஜனநாயகன் திரைப்படம் வரும் ஜுலை 23ம் தேதி உலகம் முழுவதும் சுமார் 3000 திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
தமிழகத்தில் மட்டும் 950 திரையரங்குகளில் வெளியாக உள்ளது. முதலமைச்சர் விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

கர்நாடகா, கேரளா மாநிலங்களில் முன்பதிவு நேற்று முன்தினமே தொடங்கப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் நேற்று தொடங்கியது. இந்நிலைபில் படத்தின் ப்ரொமோ வெளியாகியுள்ளது.
சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் செய்த சைகை, அவர் அணிந்து வந்த கோட் சூட் காட்சி என பயங்கர ஆக்ஷன் காட்சியாக அமைந்துள்ளது குறித்த ப்ரொமோ.
மேலும் தற்போது இப்படத்தின் டிக்கெட் முன்பதிவின் அதிகப்பட்ட விலை 2500 ரூபாய் என்றும் கூறப்பட்டு வருகின்றது.
சட்டமன்றத்தில் ஸ்டாலினுக்கு எதிராக முதல்வர் செய்த சைகைக்கு பல எதிர்ப்புகள் கிளம்பியிருந்த நிலையில், தற்போது படத்திலும் அப்படியொரு காட்சிகள் இடம்பெற்றுள்ளது பயங்கர எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Raavanamavan daa for a reason 🔥#JanaNayaganFromJuly23
— KVN Productions (@KvnProductions) July 20, 2026
The Hon'ble Chief Minister @actorvijay @TheKVNofficial @KvnProductions #HVinoth @hegdepooja @anirudhofficial @thedeol @_mamithabaiju @Jagadishbliss @LohithNK01 @RamVJ2412 @TSeries pic.twitter.com/zTC6EegRkj