மகள், மருமகன் காதலுக்கு பச்சை கொடிக் காட்டிய ரோபோ சங்கர்! குடும்பத்துடன் வெளியிட்ட வீடியோ
நடிகர் ரோபோ சங்கர் மகள் மற்றும் மருமகனுடன் இணைந்து வெறித்தனமாக குத்தாட்டம் போட்டுள்ளார்.
சினிமா பயணம்
பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளில் அவ்வப்போது வந்து கலக்கி வெள்ளித்திரையில் தற்போது கொடிக்கட்டி பறக்கும் நகைச்சுவை நடிகர் தான் ரோபோ சங்கர்.
இவர் தமிழ் சினிமாவிலுள்ள அத்தனை முன்னணி நடிகர்களுனும் நடித்து விட்டார்.
நகைச்சுவை நடிகராக கலக்கி வரும் நேரத்தில் உடல் நிலைக் கோளாறுவால் நடிப்பிற்கு சற்று இடைவெளி விட்டுள்ளார்.
இருந்த போதிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று தான் வருகிறார்.
மருமகனுடன் குத்தாட்டம் போடும் ரோபோ சங்கர்
இந்த நிலையில் ரோபோ சங்கர் மற்றும் அவரின் மகள் இந்திரஜா ரோபோ சங்கர் ஆகியோர் சமூக வலைத்தளங்களில் அதிக ஆக்டிவாக இருக்கிறார்கள்.
அவ்வப்போது வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களுக்கு வீட்டில் நடக்கும் விடயங்களை அப்பேட் கொடுத்து கொண்டே இருப்பார்கள். அந்த வகையில் இந்திரஜா ரோபோ சங்கர் சமீபத்தில் தன்னுடைய திருமணம் குறித்து பேசியிருப்பார்.
இதனை தொடர்ந்து தன்னுடைய வருங்கால மருமகனுடன் இணைந்து வெறித்தனமாக குத்தாட்டம் போடும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்த இணையவாசிகள், “ மஞ்சகாமாலை நோய் என தகவல்கள் பரவியது ஆனால் தற்போது ரோபோ சங்கர் ஆடும் ஆட்டத்தை பார்த்தால் அப்படி ஒன்று தெரியவில்லையே..” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.