மகனுக்காக ஏங்கிய தந்தை: ரவிச்சந்திரனின் கடைசி நிமிடங்கள்!
நடிகர் ரவிச்சந்திரனின் இறுதி நிமிடங்கள், அவரின் உயிர்பிரியும் வேளையில் நடந்த விடயங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.
ரவிச்சந்திரன்
ரவிசந்திரனின் சொந்த ஊர் கரூர் அருகே உள்ள வாங்கல் கிராமம். இவரது இயற்பெயர் ராமன். இவரது இளமைக்காலம் மலேசியாவின் கோலாலம்பூரில் கழிந்தது.
ரவிச்சந்திரனின் தந்தை பைரோஜி சீனிவாசன். கோலாலம்பூர் தமிழ் சங்கம் நடத்திய பள்ளியில் இவர் படித்தார். மலேசிய தமிழ் மாணவர்களில் முதல் மாணவராக தேர்வு பெற்ற ரவிச்சந்திரன், மருத்துவம் படிக்க விரும்பி இந்தியா வந்தார்.
திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.
திரைப்பயணம்
1964ம் ஆண்டு ‘காதலிக்க நேரமில்லை‘ படத்தின் கதாநாயகனானார். அறிமுக படத்திலேயே படம் சூப்பர்ஹிட் படமாக அமைந்தது. மேலும் அப்படத்தில் இருந்த பாடல்களும் அனைவராலும் கொண்டாடப்பட்டது.
காதலிக்க நேரமில்லை படத்திற்கு பிறகு அதே கண்கள், இதயக் கமலம், கௌரி கல்யாணம், குமரிப்பெண், உத்தரவின்றி உள்ளே வா போன்ற படங்களில் நடித்ததன் பின்னர் பிரபலமானார்.
1960களில் முன்னணி கதாநாயகனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்தவர் தான் இந்த ரவிச்சந்திரன். காலப்போக்கில் திரைப்பட இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார்.
திருமண வாழ்க்கை
இவர் 1963ஆம் ஆண்டு விமலா என்ற பெண்ணை மணம்முடித்தார். இத்தம்பதியிருக்கு இரண்டு பிள்ளைகளும் பிறந்தனர். முதல் மகன் பாலாஜி (தொழில் அதிபர்) இரண்டாவது மகன் ஹம்சவரதன் (நடிகன்).
பிறகு மலையாள நடிகையான ஷீலாவுக்கும் ரவிச்சந்திரனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவருக்கிடையிலான பழக்கம் நாளடைவில் முற்றிப்போக ஷீலாவையும் திருமணம் செய்து இரு குடும்பமாக தனித்தனியே பார்த்து வந்தார்.
இத்தம்பதியினருக்கு ஜோர்ஜ் என்ற மகன் பிறந்தார். அவரும் தற்போது நடித்து வருகிறார்.
காலம் செல்ல செல்ல இருவருக்கு ஈகோ காரணமாக ரவிச்சந்திரம் - ஷீலா பிரிந்துவிட்டார்கள். மகன் ஜோர்ஜும் தனது தாயாருடன் சென்று விட்டார்.
இறுதி நிமிடங்கள்
ரவிச்சந்திரனுக்கு சக்கரை வியாதி சிறுநீரக கோளாறு போன்ற நோய்களால் பெரும் அவதிப்பட்டு வந்தார். ஒரு கட்டத்தில் மரணபடுக்கைக்குச் சென்ற அவர், மனதில் மகன் ஜோர்ஜ் பற்றிய எண்ணங்களே ஓடிக்கொண்டிருந்தது.
எந்த உறவினர் வந்து பார்த்தாலும் அவர் மனம் என்னவோ அவரது மகன் ஜோர்ஜை மட்டுமே தேடியது.
இதனையறிந்த உறவினர்கள் ஜோர்ஜை வரவழைத்தார்கள் மகனைப் பார்த்ததும் கையை பிடித்துக் கொண்டு அதுவரை பேச்சு சைகை இல்லாமல் இருந்த ரவிச்சந்திரனின் கண்களில் இருந்து கண்ணீர் மட்டுமே பேசியது.
மகனைப் பார்த்த சந்தோசத்தில் இரண்டாவது நாளே (25-07-2011) அவரின் உயிர் அவரை விட்டுப் பிரிந்து சென்றது.
ரவிச்சந்திரனின் உருக்கமான கதை தான் பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.