சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள்
நடிகர் ரவி மோகன் பற்றிய சர்ச்சைகள் நாளுக்கு நாள் அதிகமாகி வந்தாலும், தற்போது ஒரு நற்செய்தியொன்றை பகிர்ந்துள்ளார்.
ரவி மோகன்
தமிழ் சினிமாவில் ஜெயம் திரைப்படத்தின் மூலமாக பிரபலமானாவர் தான் நடிகர் ரவி மோகன்.
இந்த திரைப்பட வெற்றிக்கு பின்னர், ரவி தன்னுடைய பெயரை ஜெயம் ரவி என மாற்றிக் கொண்டார். ஆனால் சில மாதங்களுக்கு முன்னர் ரவி மோகன் என்று பெயர் மாற்றம் செய்திருந்தார்.
கடந்த வருடம் அவருடைய குடும்ப பிரச்சினைகள் ஊடகங்களுக்கு வர ஆரம்பித்தது.
அதாவது காதலித்து திருமணம் செய்த ஆர்த்தி விவாகரத்து செய்யப் போவதாகவும், குடும்பத்திற்குள் ஏகப்பட்ட பிரச்சினைகள் நடப்பதாகவும் அறிக்கையொன்றை பகிர்ந்தார். அன்று முதல் இன்று வரை சமூக வலைத்தளங்களில் ரவிமோகன் பற்றிய செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது.
குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்
இந்த நிலையில், நேற்றைய தினம் தன்னுடைய பெண் தோழியான கெனிஷாவுடன் கோயிலுக்கு சென்ற புகைப்படங்கள் வெளியாகியன.
இதனை தொடர்ந்து இன்றைய தினம் ரவி மோகன் புதியதாக ஸ்டுடியோ ஒன்றை துவங்கியுள்ளாராம். இது தொடர்பாக அவருடைய சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
அந்த நிறுவனத்திற்கு "ரவி மோகன் ஸ்டுடியோஸ்" என்று பெயரிட்டுள்ளார். "இந்த பெயர் மற்றும் லோகோவுக்கு பின்னால் எனது வாழ்க்கையை சினிமா அமைத்தது. எனவே என் பெயரிலேயே இந்த பயணத்தை தொடங்கினேன்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ரவி மோகனின் இந்த புதிய பயணத்திற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |