ஸ்டார்ட் மியூசிக் சீசன் 6 இல் பிரியங்கா இல்லையா? வைரலாகும் promo video
தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே இதுவரை காலமும் தொகுத்து வழங்கிய ஸ்டார் மியூசிக் நிகழ்சியின் சீசன் 6 promo காணொளியை விஜய் தொலைக்காட்சி தற்போது வெளியிட்டுள்ளது. குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பிரியங்கா தேஷ்பாண்டே
தமிழ் நாட்டில், எத்தனையோ தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் இருந்தாலும் ஒரு சிலரே ஸ்டார் தொகுப்பாளர்களாக இருக்கின்றனர்.அப்படி, நட்சத்திர தொகுப்பாளராக இருப்பவர், பிரியங்கா தேஷ்பாண்டே.
விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுகமானாலும் வி.ஜே.பிரியங்கா தேஷ்பாண்டே இல்லாத நிகழ்ச்சிகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு விஜய் டிவியின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.
இதன் மூலம் தனக்கான ரசிகர்கள் கூட்டத்தையும் உருவாக்கிக்கொண்டார்.அதேபோல் தொகுப்பாளராக இல்லாமல், பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற பிரியங்கா 2-வது இடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை தவறவிட்டார்.
ஆனால் அதனை தொடர்ந்து குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியிலும், போட்டியாளராக பங்கேற்று டைட்டில் வின்னர் ஆனார். இவர் அண்மையில் வசி சாச்சி என்பவரை திடீர் திருமணம் செய்துக்கொண்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.இவர்களின் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது.
திருமணத்துக்கு பின்னர் விஜய் தொலைக்காட்சியில் இருந்து பிரியங்கா விலகிவிட்டாதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி இணையத்தில் புயலை கிளப்பியிருந்தது. ஆனால் திருமணம் முடிந்த ஒரு வாரத்திலேயே சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்துவழங்கினார்.
ஸ்டார் மியூசிக் சீசன் 6
சின்னத்திரை ரசிகர்களுக்கு சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளை கொடுப்பத்தில் விஜய் டிவிக்கு நிகர் இல்லை என்று சொல்லலாம். அந்த வகையில் சீரியல் என்றாலும் ரியாலிட்டி ஷோக்கள் என்றாலும் விஜய் டிவி நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் மக்கள் கூட்டம் அதிகம் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் ஸ்டார் மியூசிக். அதுவரையில் 5 சீசன்கள் முடிவடைந்த நிலையில் 6 ஆவது சீனன் விரைவில் ஆரம்பிக்கவுள்ளது. தற்போது ஸ்டார் மியூசிக் சீசன் promo காணொளியை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.
அதன் மூலம் பிரியங்கா தான் தொகுப்பாளினி என்பது உறுதியாகியுள்ளது. குறித்த காணொளி தற்போது இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருவதுடன் பிரியங்கா தேஷ்பாண்டேவின் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |