நடிகை சினேகா வீட்டில் அரங்கேறிய கொண்டாட்டம்: மாடர்ன் உடையில் வெளியிட்ட புகைப்படம்
இன்று பிறந்தநாள் கொண்டாடும் தனது கணவர் பிரசன்னாவிற்கு சினேகா வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் படுவைரலாகி வருகின்றது.
நட்சத்திர தம்பதிகளான நடிகர் பிரசன்னா மற்றும் சினேகா ஏராளமான வெற்றிப்படங்களில் நடித்து ரசிகர்களின் அன்பைப் பெற்றவர்கள்.
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் நடித்த போது பிரசன்னாவுடன் காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களுக்கு 6 வயதில் விஹான் என்ற மகனும், ஆதந்த்யா என்ற மகளும் இருக்கின்றனர்.
சமீபத்தில் தனது மகனின் பிறந்தநாளைக் கொண்டாடிய இவர்கள் அதன் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டிருந்தனர்.
இந்நிலையில் இன்று பிரசன்னா தனது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், புன்னகை அரசி மாடர்ன் உடையில் கணவருடன் இருக்கும் புகைப்படத்தினை வெளியிட்டு கணவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இப்புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.