முதல்வர் விஜய்க்கு நேரில் வாழ்த்து கூறிய நடிகர் பிரசாந்த்
முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து நடிகர் பிரசாந்த் தனது தந்தையுடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதல்வர் விஜய்
நடிகரும், தவெக கட்சி தலைவருமான விஜய் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதுடன், சில கட்சிகளுடன் கூட்டணி வைத்து தற்போது முதலமைச்சராகவும் மாறியுள்ளார்.
பல தடைகளை தாண்டி முதலைமைச்சர் இருக்கையில் அமர்ந்துள்ள விஜய்யின் அடுத்தடுத்த செயல்கள் மக்களால் பெரிதும் கவனிக்கப்பட்டு வருகின்றனர்.
அண்ணா என்று மக்களின் குரல் எங்கு கேட்டாலும் உடனடியாக அதற்கு ரியாக்ஷன் கொடுத்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகின்றார்.
இலங்கை நாடாளுமன்றம் வரை விஜய் குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. இந்நிலையில் விஜய்யை பல பிரபலங்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்..

பிரசாந்த் வாழ்த்து
அந்த வகையில் நடிகர் பிரசாந்த் தனது தந்தை தியாகராஜனுடன் நேரில் வந்து விஜய்க்கு வாழ்த்து கூறியுள்ளார். நடிகர் பிரசாந்த் விஜய்யுடன் கோட் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் விஜய்யை அவரது வீட்டிற்கே சென்று பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது..

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |