பிரபு குடும்பத்தில் ஏற்பட்ட சொத்து தகராறு! தங்கை வீட்டிற்கு மருமகளாக சென்றுள்ள மகளின் நிலை என்ன?
நடிகர் பிரபு மற்றும் ராம்குமார் ஆகியோருக்கு எதிராக அவரது சகோதரிகள் சாந்தி மற்றும் ராஜ்வி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
நடிகர் சிவாஜி கணேசன்
மறைந்த பழம்பெரும் நடிகரான சிவாஜிகணேசன் ஒற்றுமைக்கு பெயர் போனவர் என்று அறியப்பட்ட நிலையில், தற்போது அவரது குடும்பத்தில் சொத்து பிரச்சினை எழுந்துள்ளது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் சிவாஜி கணேசன் தான் வீடு கட்டும் போதே தனது சகோதரர்களுடன் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே வீட்டை பார்த்து பார்த்து கட்டினாராம்.
சிவாஜியின் குடும்பம்
சிவாஜிக்கு ராம்குமார், பிரபு என்ற மகன்களும், சாந்தி, தேன்மொழி என்ற இரண்டு மகள்களும் உள்ளனர்.
இதில் ராம்குமார் நடிகராகவும், தயாரிப்பாளராகவும், பிரபுவும் நடிகராக வலம் வருகின்றார். இவர்களது சகோதரி இருவரையும் மருத்துவர் மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார் சிவாஜி.
மேலும் மகள்கள் ஒற்றுமையாக இருப்பதற்கு இருவரையும் ஒரே வீட்டில் அண்ணன் தம்பிகளுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார்.
தங்கை வீட்டில் தனது பெண்ணை கொடுத்த பிரபு
நடிகர் பிரபுவும் தனது மகள் ஐஸ்வர்யாவை தனது சகோதரியான தேன்மொழியின் மகனுக்கே திருமணம் செய்து கொடுத்துள்ளார். இது பிரபுவின் ஆசை மட்டுமின்றி அவரது தாய், தந்தையின் ஆசையாகவே இருந்துள்ளது. ஐஸ்வர்யாவின் கணவர் குணால் லண்டலில் மென்பொறியாளராக வேலை பார்த்து வருகின்றார்.
ஆனால் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்துவிட்டு, பின்பு விவாகரத்து செய்துவிட்டாராம்.
சொத்தால் உறவில் வந்த விரிசல்
இந்நிலையில் தான், மறைந்த நடிகர் திலகம் சிவாஜியின் குடும்பத்தில் தற்போது சொத்து பிரச்சனையால் மோதல் வெடித்துள்ளது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சம்பாதித்த சொத்துக்களை பிரிப்பதில் வாரிசுகளிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
நடிகர் பிரபு மற்றும் ராம்குமார் ஆகியோருக்கு எதிராக அவரது சகோதரிகள் சாந்தி மற்றும் ராஜ்வி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
தங்களுக்கு தெரியாமல் சில சொத்துக்களை நடிகர் பிரபு மற்றும் அவரது அண்ணன் ராம்குமார் ஆகியோர் விற்று விட்டதாகவும், சில சொத்துக்களை அவர்களுடைய மகன்களின் பெயருக்கு மாற்றம் செய்து விட்டதாகவும் சகோதரிகள் சாந்தி மற்றும் ராஜ்வி குற்றம் சாட்டியுள்ளனர்.
பிரபு மற்றும் ராம்குமார் ஆகியோர் ஜோடிக்கப்பட்ட உயில் தயாரித்து தங்களை ஏமாற்றி விட்டதாக மனுதாக்கல் செய்துள்ள அவர்கள், நீதிமன்றம் தலையிட்டு தங்களுக்கு உரிமையான சொத்துக்களை மீட்டு தர வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.