‘ஜெயிலர் 2’வில் மோகன்லாலுக்கு நடந்தது என்ன? கொந்தளிக்கும் காஸ்டியூம் டிசைனர்!
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் நேற்றைய தினம் பிரம்மாண்டமாக வெளியாகி வெற்றிநடை போட்டு வருகின்றது.
நீண்ட நாட்களாகப் படத்தின் வெளியீட்டை எதிர்பார்த்துக் காத்திருந்த ரஜினி ரசிகர்கள், படத்தைக் கொண்டாடி வருகின்றனர். அதேவேளை, படத்திற்குக் கிடைத்து வரும் விமர்சனங்கள் கலவையாக அமைந்துள்ளன.

இந்நிலையில், படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ள மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் தொடர்பான சர்ச்சை ஒன்று தற்போது பேசுபொருளாகியுள்ளது.
மோகன்லாலின் காட்சிகள் நீக்கம்
‘ஜெயிலர் 2’ படத்தில் மோகன்லாலின் பல காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள அவரது காஸ்டியூம் டிசைனர், அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் சமூக வலைதளத்தில் பதிவென்றை வெளியிட்டுள்ளார்.

குறிப்பாக, மோகன்லாலுக்காக வடிவமைக்கப்பட்ட இரண்டு தோற்றங்களும் படத்திலிருந்து முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “நமது சூப்பர்ஸ்டாருக்கே இந்த நிலை என்றால், இனி இதுபோன்ற தொடர்ச்சிப் படங்களில்நான் நிச்சயமாகப் பணியாற்றமாட்டேன்” என்ற கருத்தையும் அவர் சற்று காட்டமாகவே பதிவிட்டுள்ளார்.

குறித்த பதிவு இணையத்தில் தற்பொது வைரலாகி வருவதுடன், மோகன்லால் ரசிகர்களும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |