அமெரிக்காவில் செட்டிலாகி ராஜ வாழ்க்கை வாழும் நெப்போலியனின் சொத்து மதிப்பு
சினிமா, அரசியல் என இந்தியாவில் ஒரு கலக்கு கலக்கி விட்டு அமெரிக்காவில் செட்டிலான நெப்போலியனின் சொத்து மதிப்பு விபரம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
நடிகர் நெப்போலியன்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் தான் நெப்போலியன். இவர் சினிமாவில் மட்டுமல்ல அரசியலிலும் ஒரு கை பார்த்து விட்டுதான் வந்திருக்கிறார்.
இவர் 2009ஆம் ஆண்டு முதல் அரசியல் பயணத்தை ஆரம்பித்து தி.மு.க சார்பில் போட்டியிட்டு ஒரு முறை எம்.எல்.ஏவாக ஆகியுள்ளார். பின்னர் 2014இல் தி.மு.க வை விட்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்துள்ளார்.
இவர் ஜெயசுதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதிகளுக்கு தனுஷ் நெப்போலியன் மற்றும் குணால் நெப்போலியன் என்ற இரு மகன்கள் உள்ளனர்.
சொத்துமதிப்பு
நடிகர் நெப்போலியன் தற்போது அமெரிக்காவில் 12 ஆண்டுகளாக வசித்து வருகிறார். இவரின் மூத்த மகனின் சிகிச்சைக்காகத் தான் அமெரிக்காவில் செட்டிலாகியிருக்கிறார்.
இது மட்டுமல்லாமல் அமெரிக்காவில் பிரமாண்டமான வீட்டையும் கட்டியிருக்கிறார். அந்த வீட்டில் சகல வசதிகளும் அடங்கிய வகையில் செதுக்கி செதுக்கி கட்டியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அமெரிக்காவில் ஐடி கம்பனி ஒன்றையும் நடத்தி அதிலும் கோடி கோடியாம் சம்பாதித்து வருகிறார்.
இதுதவிர அமெரிக்காவிலலேயே 3 ஆயிரம் ஏக்கருக்கு விவசாய பண்ணை ஒன்றையும் வைத்து காய்கறிகள் அறுவடை செய்து அதிலும் நல்ல இலாபம் பார்த்து வருகிறார். மேலும், நெப்போலியனிடம் மொத்தம் 4 சொகுசு கார்களும் வைத்திருக்கிறார்.
சினிமாவில் சம்பாதித்து அமெரிக்காவில் சொகுசு வாழ்க்கை வாழும் நெப்போலியனின் சொத்து மதிப்பு மாத்திரம் கிட்டத்தட்ட 200 கோடிக்கும் அதிகமாக இருககிறதாம்.
You May Like This Video
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |