முனிஷ் காதல் மனைவிக்கு கொடுத்த விலை உயர்ந்த பரிசு என்ன தெரியுமா?
காதல் மனைவிக்காக புது வீடு வாங்கி உள்ளதாக நடிகர் முனிஷ் கூறியுள்ளார்.
நடிகர் சண்முகராஜாவின் தம்பி முனிஸ் ராஜா சன்டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் தொடரின் மூலம் பிரபலமானார்.
இவர் நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் ஜீனத் பிரியாவும் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வந்தனர். இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டதாகச் செய்தி வெளியானது.
இதையடுத்து, நடிகர் ராஜ்கிரண் முனிஷ் பற்றி கடுமையாக விமர்சனங்களை அடுக்கி இருந்தார்.
இந்த நிலையில் நடிகர் முனிஷ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,போன வீடியோவில், ரிசப்ஷனுக்கு அழைப்பதாக சொல்லி இருந்தேன், ஆனால், அதற்கு முன்பு, என்னுடைய மனைவி ஆசைப்படி, அவங்களுக்கு கல்யாண பரிசாக புதிய பிஸ்னஸ் ஒன்றை இந்த மாதம் இறுதியில் தொடங்க இருக்கிறேன்.
அதற்கு என்னுடைய நண்பர்கள் உறவுகளும் மற்றும் மீடியா நண்பர்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
அதுபோக என்னுடைய மனைவிக்காக என்னுடைய சொந்த ஊரில் ஐம்பது லட்சம் ரூபாய் செலவில் ஒரு வீட்டை கட்டி வருகிறேன் அது இன்னும் இரண்டு மாதத்தில் முடிந்து விடும் அந்த வீட்டின் திறப்பு விழாவிலும் என்னுடைய சொந்த பந்தங்களை எல்லாம் அழைத்து அவர்கள் ஆசீர்வாதத்துடன் அந்த வீட்டில் பால் காய்ச்ச இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
முனிஷ்ஷின் இந்த வீடியோவை பார்க்கும் போது ராஜ்கிரண் சொன்னது போல பணத்துக்காக எதையும் செய்யும் ஆள் இல்லை என்பதற்கு சரியான பதிலடி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.