நகைச்சுவை நடிகர் மயில்சாமி பெற்ற வாக்குகள் எத்தனை?
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய நகைச்சுவை நடிகர் மயில்சாமி இதுவரையிலும் 50க்கும் குறைவான வாக்குகளே பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் 234 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 08.00 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இதில் 160க்கும் அதிகமான இடங்களில் திமுக முன்னிலை வகித்து வருவதால், அடுத்த முதல்வராக ஸ்டாலின் பதவியேற்பது உறுதியாகிவிட்டது.
அவருக்கு அரசியல் பிரபலங்கள் மற்றும் திரை நட்சத்திரங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் உதயநிதி, கமல்ஹாசனை தவிர்த்து குஷ்பு, ஸ்ரீபிரியா, மன்சூர் அலிகான் போன்றோர் தோல்வியை சந்தித்துள்ளனர்.
சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட நடிகர் மயில்சாமி, 50க்கும் குறைவான வாக்குகளை பெற்று படுதோல்வியை சந்தித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.