மறைந்த மாரிமுத்துவின் காதல் கதை... பள்ளி காதலியை கரம்பிடித்தது எப்படி?
சின்னத்திரையில் முன்னணி நடிகராக வலம் வந்த நடிகர் மாரிமுத்து சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், அவரது காதல் கதை ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ளது.
நடிகர் மாரிமுத்து
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து உலகம்முழுவம் பிரபலமானவர் தான் நடிகர் மாரிமுத்து.
இவர் சில தினங்களுக்கு முன்பு டப்பிங் செய்து கொண்டிருந்த போது சற்று உடல்நிலை முடியாமல் போன நிலையில், தானே மருத்துவமனைக்கு கார் ஓட்டிச்சென்றுள்ளார்.
ஆனால் மருத்துவமனைக்கு சென்றதும் அவர் உயிர் பிரிந்துள்ளது. ஆம் மாரடைப்பினால் உயிரிழந்தது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இவர் மறைந்து சில தினங்கள் ஆகியுள்ள நிலையில், இவரது பேச்சு நாளுக்குநாள் அதிகரித்து ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. தற்போது இவரது காதல் கலை ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மாரிமுத்துவின் காதல் கதை
மாரிமுத்து கூறுகையில், நான் ஒன்பதாவது படிக்கும் போதே இவள் தான் என்னுடைய மனைவி என்று தனக்குத் தெரியும். அவள் பார்க்காத போதும் நானும், நான் பார்க்காத போது அவளும் பார்த்துக்கொள்வோம் என்று கூறியுள்ளார்.
இதற்கு அவரது மனைவி, எனக்கும் இவருக்கும் திருமணம் என்று முடிவானதும் தனக்கு கடிதம் எழுதுவார். அப்பொழுதெல்லாம் போன் எல்லாம் இல்லை.... அந்த கடிதத்துடன் புதிய 10 ரூபாய் நோட்டும் அனுப்புவார். அதற்கு நான் பூ வாங்கிக் கொள்ள வேண்டும்... சென்னையில் சினிமாவில் இருக்கின்றார் மட்டுமே தனக்கு தெரியும்... மற்ற எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து மாரிமுத்து கூறுகையில், பம்பாய் படத்தின் பிரீமியர் ஷோ நடந்து கொண்டிருந்த போது, அதற்கான டிக்கெட்டினை நான் தான் விநியோகித்தேன். சுஜாதா சுாரின் டிக்கெட்டினை கொண்டு வீட்டில் கொடுக்க சென்ற போது அவர்கள் வீட்டில் இல்லை என்பது எனக்குத் தெரிந்தது... மேலும் அவை திரையரங்கிளில் முன்னணியில் இருந்த இருக்கை... அதில் நானும், மனைவியும் சென்று படம் பார்த்தோம்... இது மனைவிக்கு பிரமிப்பாக இருந்தது என்று கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |