26 வருடங்கள் முயற்சித்தும் நிறைவேறாத ஆசை.. இறுதியில் நடந்தது என்ன?
மறைந்த மனோஜ் பாரதிராஜாவுக்கு நீண்ட நாள் ஆசை ஒன்று இருந்துள்ளதாகவும், அதனை அவர் நிறைவேற்றாமல் இறந்து விட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
மனோஜ் பாரதிராஜாவின் இறப்பு
இயக்குநர் இமயம் என ரசிகர்களால் கொண்டாடப்படும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா நேற்றைய தினம் காலமானார்.
இதனை தொடர்ந்து அவர் பற்றிய செய்தி சமூக வலைத்தளங்களில் பரவலாக உள்ளது.
ஒரு மாதத்திற்கு முன்னர் மனோஜுக்கு இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டு, வீட்டில் ஓய்வில் இருந்துள்ளார். கடந்த சில நாட்களாக உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், தந்தை போன்று இயக்குநர் ஆக வேண்டும் என கனவுடன் தான் மனோஜ் இருந்துள்ளார். ஆனால் பாரதிராஜாவுக்கு மகனை நடிக்க வைத்து அழகு பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இருந்துள்ளது.
நடிகரானது ஏன்?
அமெரிக்காவின் சவுத் ஃப்ளோரிடா பல்கலைக்கழகத்தில் தியேட்டர் நடிப்பு குறித்துப் படித்திருக்கிறார்.
பின்னர் "தாஜ்மஹால்"என்ற படத்தில் நடித்தார். இதனை தொடர்ந்து, வருஷமெல்லாம் வசந்தம், சமுத்திரம், அல்லி அர்ஜுனா, உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகனாக மட்டுமல்லாமல் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார்.
மனோஜ் நாயகனாக நடித்த திரைப்படங்களில் இருந்து எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இதனால் பல ஆண்டுகளாக சினிமா பக்கம் வராமல் இருந்த அவர், "எந்திரன்" திரைப்படத்தில் ஒரு துணை இயக்குநராகப் பணியாற்றினார்.
இந்த திரைப்படத்தில் சிட்டி வேடத்தில் வரும் நிறைய காட்சிகளில் மனோஜ் தான் டூப் போட்டு நடித்தார் என்றும் கூறப்படுகிறது.
நிறைவேறாத ஆசை
மேலும், நடிகராக இருக்கும் ஆசையை ஒரு பக்கம் வைத்து விட்டு இயக்குநராக ஆசைப்பட்டார்.
அந்த வகையில், தனது தந்தை பாரதிராஜாவை வைத்து இளையராஜா இசையில் "மார்கழி திங்கள்" என்ற படம் மூலம் இயக்குநராகவும் அறிமுகம் ஆனார். இப்படி 26 வருடமாக சினிமாவில் இருந்த மனோஜுற்கு நிறைவேறாத ஆசையொன்று இருந்ததாக சொல்லப்படுகிறது.
அதாவது, பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான சிகப்பு ரோஜாக்கள் படத்தில் இரண்டாம் பாகம் எடுக்க முயன்றுள்ளார். ஆனால் அந்த திரைப்படம் தயாரிக்கும் பணிக்கு செல்லவில்லை.
இது குறித்து பேட்டியில் பேசிய மனோஜ், “சிகப்பு ரோஜாக்கள் கதையை கையில் எடுக்கும் ஒவ்வொரு முறையும் ஏதாவது தடங்கல் வந்து விடுகிறது இது போன்று 3 திரைப்படங்களுக்கான கதைகளை எழுதினாலும் அவற்றையும் படமாக்க முடியவில்லை..” என வறுத்ததுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |