சுங்கத்துறையை ஏமாற்றிய ரம்பா- கடல் கடந்து சென்ற பொருள்.. அவரே கூறிய உண்மை
இலங்கை சுங்கத்துறையிடம் மறைத்து நடிகை ரம்பா இந்தியாவுக்கு கொண்டு சென்ற பொருளின் விவரங்களை அவரே பேட்டியொன்றில் தெளிவாக கூறியுள்ளார்.
நடிகை ரம்பா
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் தான் ரம்பா.
இவர் நடிப்பில் வெளியான ஏகப்பட்ட திரைப்படங்கள் தமிழ் சினிமாவிற்கு பாரிய திருப்பு முனையை ஏற்படுத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து திருமணம் செய்து கொண்ட ரம்பா சுமாராக 14 வருடங்கள் சினிமாவிற்குள் வராமல் இருக்கிறார்.
திருமணத்திற்கு பின்னர் எந்தவிதமான நிகழ்ச்சிகளிலும், படங்களிலும் தலைகாட்டாத ரம்பா, தனது சமூக வலைத்தளங்களில் மட்டும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
சுங்கத்துறையை ஏமாற்றினாரா?
இப்படியொரு நிலையில் பிரபல யூடியூப் சேனல் ஒன்றிற்கு கணவருடன் பேட்டி கொடுத்துள்ளார்.
அதில்,“ இலங்கையில் இருந்து வரும் பொழுது ஒரு மருதாணி செடியை கிளைகள் எல்லாம் வெட்டி விட்டு வெறும் வேர் மாத்திரம் இந்தியாவுக்கு கொண்டு வந்துள்ளார்.
பொதுவாக விமானத்தில் அடுத்த நாட்டிலிருந்து மரம் செடி கொண்டு வர அனுமதி கிடையாது என்று கூறிக் கொண்டே இதனை பகிர்ந்துள்ளார்.
இது போன்று ஏகப்பட்ட செடிகளை கொண்டு வந்துள்ளேன்.. மற்ற செடிகள் எல்லாம் வீட்டின் பின் பகுதியில் உள்ளது. எனக்கு இப்படியான வேலைகள் மிகவும் பிடிக்கும்..” எனக் கூறியுள்ளார்.
இந்த செய்தி இணையவாசிகள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |