நடிகர் மாதவனின் சொத்து மதிப்பு எத்தனை கோடினு தெரியுமா?
நடிகர் மாதவனின் சொத்து மதிப்பு மற்றும் சம்பளம் குறித்த தகவலை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
நடிகர் மாதவன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் நடிகர் மாதவன், அலைபாயுதே திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானார்.
பின்பு பல திரைப்படங்களில் நடித்து ஆண் ரசிகர்களை மட்டுமின்றி பெண் ரசிகைகளையும் கட்டிப் போட்டார். தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்த மாதவன், சில காலம் நடிப்பிலிருந்து ஒதுங்கியிருந்தார்.
கடந்த 2016ம் ஆண்டு இறுதிச்சுற்று படம் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்து அசத்தியதுடன், இப்படம் பெரும் வெற்றியையும் பெற்றது.
இதனையடுத்து தொடர்ந்து நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இயக்குனர் அவதாரம் எடுத்து ராகெட்ரி என்ற படத்தினை இயக்கினார்.
இப்படம் கலவையான விமர்சனம் பெற்ற நிலையில், நடிப்பில் மாதவன் அசத்தியிருந்தார். தற்போது படம் இயக்கும் ஐடியாவில் இல்லை என்று நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வருகின்றார்.
அண்மையில் கேசரி 2 படத்தில் அக்ஷய் குமாருடன் வழக்கறிஞர் நெவில் மெக்கின்லேவாக நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார் மாதவன். அதேபோல் அஜய் தேவ்கனின் சைத்தான் படத்தில் மாதவன் கொடூர வில்லனாக நடித்து ரசிகர்களை மிரள வைத்தார்.
சொத்து மதிப்பு என்ன?
இந்நிலையில் மாதவனுக்கு 55 வயதாகும் நிலையில் அவரது சொத்து மதிப்பு பற்றி தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி, அவருக்கு மொத்தம் 115 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து இருக்கும் என்று கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி சென்னையில் ஒரு பிரமாண்ட பங்களா, மும்பையில் ஒரு பங்களா வைத்திருக்கும் அவரிடம், 80 லட்சம் ரூபாயில் ஒரு பென்ஸ் கார், ஒரு கோடி ரூபாயில் ஒரு ரேஞ்ச் ரோவர் கார், 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரோட் மாஸ்டர் க்ரூஸர், 27 லட்சம் மதிப்புள்ள யமஹா வி மேக்ஸ், 28 லட்சம் ரூபாய் மதிப்புள்ள BMW பைக், 17 லட்சம் ரூபாய் மதிப்புள்ள டுகாட்டி உள்ளிட்ட பைக்குகள் இருக்கின்றன.
அதனுடன் இவர் ஒரு படத்துக்கு 10 முதல் 12 கோடி ரூபாய்வரை சம்பளமாக பெறுகிறார் என்றும் கூறப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
