மறைந்த நடிகர் மாரிமுத்துவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
மறைந்த நடிகர் மாரிமுத்துவின் சொத்து விபரம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
நடிகர் மாரிமுத்து
கடந்த 2008ஆம் ஆண்டில் கண்ணும் கண்ணும் என்ற திரைப்படத்தை இயக்கிய இவர், சுமார் 6 வருடங்கள் கழித்து விமல், பிரசன்னா, ஓவியா, அனன்யா, இனியா உள்ளிட்ட நட்சித்திரங்களை வைத்து புலிவால் என்ற திரைப்படத்தையும் இயக்கினார்.
அதற்கு முன்பு, இயக்குநர்கள் மணிரத்னம், சீமான், எஸ்.ஜே. சூர்யா, வசந்த் ஆகியோரிடமும் பணியாற்றியுள்ளார். தற்போது இவரை மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்த்தது எதிர்நீச்சல் சீரியல் தான்.
மீம்ஸ் கிரியேட்டர் முதல் ஆண் மற்றும் பெண் ரசிகர்கள் என ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தினை தனது நடிப்பினால் கவர்ந்தவர். இவரது முக பாவனை, தோரணை, ஏ... இந்தாம்மா... என்ற பேச்சு யாராலும் மறக்கமுடியாது.
இவரது சொத்து மதிப்பு என்ன?
நடிகர் மாரிமுத்து தனது தேவைக்கு என்று எந்தவொரு முன் ஏற்பாடுகள் செய்து வைக்கவில்லையாம். இரண்டு முறை இதயத்தில் ஸ்டண்ட் வைக்கப்பட்டிருந்தும், அவசர தேவைக்கு என்று இன்சுரன்ஸ் கூட செய்து வைக்கவில்லையாம்.
இவரது முதல் சம்பளம் தான் வளர்த்த கோழிகளை விற்கு கிடைத்த 70 ரூபாய் தானாம். அதன் பின்பு நடிப்பில் கிடைத்த வருமானம் என்று கூறினால் 4 ரூபாய் 50 காசு என்று பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
பின்னர் சீரியலுக்கு 20 ஆயிரம் வாங்கிவந்த நிலையில், தற்போது 40 முதல் 50 ஆயிரம் ஒரு நாளைக்கு வாங்குவதாக தகவல் வெளியானது.
வீட்டின் வரவு செலவுகளை முழுவதும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதுடன், தனக்கு வரும் வருமானம் எவ்வளவு என்பதை குடும்பத்தில் மனைவியிடம் இறக்கும் வரையிலும் கூறியது இல்லையாம்.
இவர் தற்போது கட்டியிருக்கும் வீட்டின் மதிப்பு 2 கோடி என்று அவரது தாய் சமீபத்தில் கூறியிருந்தார். அதன்படி குணசேகரனின் சொத்து மதிப்பு என்று கூறினால், தற்போது கட்டப்பட்டிருக்கும் வீடும், ஒரு காரும் மட்டும் தான் என்று கூறப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |