நகைகளை சக்திக்கு கொடுத்த விசாலாட்சி... கடுங்கோபத்தில் ஆதிகுணசேகரன்: பரபரப்பான ப்ரோமோ காட்சி
ஆதிகுணசேகரனின் மறைவைத் தொடர்ந்து எதிர்நீச்சல் சீரியல் தொடர் தற்போது அவரின் இறுதி எபிசோட்டுடன் நகர்ந்துக் கொண்டிருக்கின்ற வேளையில் இன்றைய தினத்திற்கான ப்ரோமோ காட்சி வெளியாகி இருக்கிறது.
எதிர்நீச்சல் சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் இப்போது விறுவிறுப்பான கதைக்களத்துடன் வேற லெவலில் நகர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த சீரியல் முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்தி தான் இந்த கதைக்களம் நகர்ந்துக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் கனிகா, மாரிமுத்து, சத்தியப்பிரியா, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா, சபரி பிரசாந்த், மதுமிதா, என ஒரு பெரிய பட்டாளமே தங்களுக்கு கொடுத்த கேரக்டரில் தொடர்ந்து சிறப்பாக நடித்து வருகிறார்கள்.
இந்த சீரியல் தான் தற்போது மற்ற சீரியல்களோடு போட்டிப் போட்டு கொண்டிருக்கிறது.
இன்றைய ப்ரோமோ
இன்றைய தினத்திற்கான ப்ரோமோ காட்சியில், விசாலாட்சி அம்மாவின் நகைகளை எல்லாம் யாராவது ஒருவருக்குதான் கொடுக்க வேண்டும் என்ற குணசேகரனின் பேச்சுக்கிணங்க அந்த நகைகளை எல்லாம் சக்தி- ஜனனிக்கு கொடுத்துவிட்டார்.
சக்தி-ஜனனி புதிய கம்பனியை ஆரம்பிக்க போவதாக சொல்லவும் அந்த நகைகளை எல்லாம் சக்தி-ஜனனிக்கு கொடுத்துவிட்டார். இதனால் ஆதிகுணசேகரன் மிகுந்த கோபத்தில் இருக்கும் காட்சிகள் ப்ரோமாவாக வெளியாகி இருக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |