படங்களில் வில்லன் வாழ்க்கையில் ஹீரோ.. கோட்டா ஶ்ரீனிவாச ராவ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
நடிகர் கோட்டா ஶ்ரீனிவாச ராவ்வின் சொத்து மதிப்பு விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
காலமானார்
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 750 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமாக இருந்தவர் தான் நடிகர் கோட்டா ஶ்ரீனிவாச ராவ்.
ஆந்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நடிகர் கோட்டா ஶ்ரீனிவாச ராவ் குணசித்திர வேடங்களிலும் வில்லனாகவும் நடித்து பிரபலமானவர்.
தமிழில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவான சாமி திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறியப்பட்டவர்.
இதனை தொடர்ந்து, திருப்பாச்சி, சகுனி, கோ போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
நடிகர், பாடகர், டப்பிங் கலைஞர் எனப் பன்முகத்தன்மை கொண்ட இவர், 750 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
கடந்த 1999 முதல் 2004 வரை ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துள்ளார்.
இந்திய சினிமாவுக்கு இவர் அளித்த பங்கிற்காக 2015 ஆம் ஆண்டு பத்ம ஶ்ரீ விருது வழங்கி மத்திய அரசு கௌரவித்துள்ளது.
சொத்து மதிப்பு
இந்த நிலையில், திரைப்படத் துறையில் ஒரு ஜாம்பவானாக இருந்த கோட்டா ஸ்ரீனிவாச ராவின் சொத்து மதிப்பு இன்னும் ஒரு புதிரான விஷயமாகவே உள்ளது.
அவரது நீண்ட வாழ்க்கையில், கணிசமான செல்வத்தையே சேர்த்து வைத்துள்ளார். கடந்த ஆண்டுகளில் வெளியான அறிக்கைப்படி, நடிகர் கோட்டா ஸ்ரீனிவாச ராவின் சொத்து மதிப்பு சுமாராக ரூ. 80 கோடியை நெருங்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், அரசியலில் அவர் ஈடுபட்டிருந்த காலத்தில், அவரது தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் அவரது பெயரில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள் மட்டுமே இருந்துள்ளது.
இந்த வேறுபாடு, அவர் நிதி ரீதியாக வெற்றி பெற்ற போதிலும், அவரது பணிவு மற்றும் எளிமையான வாழ்க்கை முறையை தான் வாழ்ந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |