அழகிற்காக வைத்திருக்கும் பாத்திரத்தை கூட விடவில்லை! தீயாய் பரவும் காட்சி
வீட்டில் அழகிற்காக வைத்திருக்கும் பாத்திரத்தில் சூப்பரான தாளம் போடும் உலக நாயகனின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் சாதனை
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது உலக நாயகன் என்ற சகாப்தத்தையே உருவாக்கியுள்ளவர் தான் நடிகர் கமல் ஹாசன்.
இவரின் நடிப்பிற்கு உலகம் முழுவதும் பலக் கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள். இதனால் இவர் எந்த திரைப்படம் நடித்தாலும் அது உலகளாவிய ரீதியில் டாப் 10 க்குள் ஓடும்.
இவர் நடிக்கும் திரைப்படங்களில் இருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரங்களிலும் ஒரு வித்தியாசம் கண்டிப்பாக இருக்கும்.
அந்தளவு இவர் நடிப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்கிறார். இந்த நிலையில் இவர் தற்போது “இந்தியன் 2” திரைப்படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். இதனை எதிர்பார்த்து பல ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
பாத்திரத்தில் தாளம் போடும் கமல்
இதனை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆக்டிவா இருக்கும் கமல் அவ்வப்போது வீட்டில் பிள்ளைகளுடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிடுவார்.
அந்த வகையில் வீட்டில் அலங்காரத்திற்காக வைத்திருக்கும் ஒரு பாத்திரத்தில் அழகாக தாளம் போட்டு வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
இதனை பார்க்கும் போது கமல் அவர்கள் எல்லா விடயங்களிலும் அதிகமாக இரசனை கொண்டவராக இருக்கிறார்.
இதனை பார்த்த கமல் ரசிகர்கள்,“ வரவிற்காக தான் காத்திருகிறோம்” என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.