தளபதி ரசிகர்களை இசையால் கட்டி போட்ட பெண் கலைஞர்! வீணையால் இந்த பாடலையும் வாசிக்க முடியுமா?
வாரிசு திரைப்பட பாடலுக்கு இசைக்கலைஞர் சிறிவாணி அவர்கள் வீணையால் வாசிக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல்யமடைந்து வரும் சினிமா பாடல்கள்
பொதுவாக தமிழ் சினிமாவில் ஒரு திரைப்படம் வரும் முன்னர் அந்த திரைப்படங்களில் பாடல்கள் வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்து விடுகிறது.
சமிபத்தில் விஜய் நடிப்பில் வெளியான “வாரிசு” திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் வரும் முன், அந்த திரைப்படத்திலிருந்து,“ ரஞ்சிதமே ” என்ற பாடல் வெளிவந்து விட்டது.
இந்த பாடலுக்கு ரீல்ஸ் செய்து யூடியூப்பர்ஸ் பிரபல்யமடைந்து வந்தார்கள். மேலும் ,“ரஞ்சிதமே ” பாடலை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வாயில் முனுமுனுக்கவும் ஆரம்பித்து விட்டார்கள்.
வீணையால் தளபதி வேன்ஸ்களை கட்டி போட்ட கலைஞர்
இந்த நிலையில் கர்நாடக இலைக்கலைஞர்களின் ஒருவரான வீணை சிறிவாணி அவர்கள் வீணையால் பாடலை வாசிக்கும் காட்சி இணையத்தில் பகிரப்பட்டுள்ளது.
இதனை பார்க்கும் போது அவர் வீணையால் தேர்ச்சி பெற்றவர் என்று தெரியவந்துள்ளது.
இது மட்டுமல்ல சிறிவாணி அவர்கள் ஒரு யூடியூப் சேனலிலும் வீணை வாசிக்கும் காட்சியை பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் ,“ரஞ்சிதமே..” பாடலுக்கு சூப்பராக வீணை வாசிக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த இணையவாசிகள், குறித்த கலைஞருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.