நடிகர் கமல்ஹாசனின் சொத்து மதிப்பு எவ்வளவு? அரசியலில் பறிபோன பல கோடி ரூபாய்
நடிகர் கமல்ஹாசன் அரசியல் களமிறங்கி பணத்தை அதிகமாக இழந்துவிட்டதாகவும், அவரது சொத்து மதிப்பு தற்போது வேகமாக குறைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் கமல்ஹாசன்
முன்னணி நடிகராகவும், மக்கள் மத்தியில் உலக நாயகனாகவும் வலம் வரும் கமல்ஹாசன் 1960ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நுழைந்தார்.
ராஜ் கமல் என்ற தயாரிப்பு நிறுவனம் வைத்திருக்கும் இவர் பல படங்களை தயாரித்து வருகின்றார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் 5 சீசன்களிலும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி பல கோடி ரூபாய் சம்பளம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
புரோட்டாவில் இருந்த பாம்பு சட்டை! இணையத்தில் வைரலாகும் ஷாக் புகைப்படம்
அரசியலில் கமல்
விஸ்வரூபம் படம் சிக்கல் காரணமாக மன உளைச்சலில் இருந்த கமலஹாசன் கடந்த 2018ம் ஆண்டு மக்கள் நீதி மையம் என்னும் அரசியல் கட்சியை தனது தலைமைகள் தொடங்கியதோடு, தேர்தலில் போட்டியிட்டார்.
இவ்வாறு அறுபது ஆண்டு சினிமா வாழ்க்கை மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் பங்கு பெற்று வரும் கமல்ஹாசனின் சொத்து மதிப்பு தற்போது வெளியாகியுள்ளது. கமலஹாசனுக்கு வெறும் ரூ.177 கோடி ரூபாய் சொத்துக்கள் மட்டுமே இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இவர் தயாரித்த படங்கள் சில தோல்வியை சந்தித்து நஷ்டம் ஏற்பட்டிருந்தாலும், தேர்தல் களத்திலும் இவர் பல கோடி ரூபாயை கோட்டை விட்டதாக கூறப்படுகிறது.
ராகுவின் பெயர்ச்சியால் பேரதிர்ஷ்டம்! ஒரு வருடத்திற்கு அமோகமாக மாறும் 3 ராசிகள்