புரோட்டாவில் இருந்த பாம்பு சட்டை! இணையத்தில் வைரலாகும் ஷாக் புகைப்படம்
கேரளாவில் புரோட்டா பார்சல் ஒன்றில் பாம்பு தோல் கிடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் சமீபத்தில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட மாணவி உயிரிழந்த நிலையில், மற்றொரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் திருவனந்தபுரம் அருகே அமைந்துள்ள நெடுமங்காட்டை அடுத்த பூவத்தூர் பகுதியில் ப்ரியா என்பவர் வசித்து வருகிறார்.
அவர் தனது வீட்டின் அருகிலிருக்கும் புரோட்டா கடையில் புரோட்டா பார்சல் வாங்கியுள்ளார். அதனை பெற்றுக்கொண்டு வீட்டிற்கு எடுத்துச்சென்று பிரித்து பார்த்தபோது, பார்சலை கட்ட பயன்படுத்திய காகிதத்தினுள்ளே பாம்பு உரித்த தோல் இருந்துள்ளது.
பதறிய ப்ரியா உடனடியாக நெடுமங்காடு போலீசாருக்கும், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கும் இது குறித்து தகவல் தெரிவித்தார்.
உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உணவு பொருட்களை சுகாதாரமான முறையில் விநியோகம் செய்யவில்லை என்றும், பாதுகாப்பு அம்சங்களை முறையாக கடைபிடிக்கவில்லை என்றும் கூறி அந்த ஹோட்டலுக்கு சீல் வைத்தனர்.
புரோட்டா பார்சலில் பாம்பு தோல் இருந்ததை சிலர் செல்போனில் படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.
காணொளியை இங்கே அழுத்திப் பார்க்கவும்...