130 கோடி வரை சம்பளம் வாங்கும் நடிகர் கமலின் முதல் பட சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாம பாருங்க…
130 கோடி சம்பளம் வாங்கும் நடிகர் கமல் ஆரம்ப காலங்களில் எவ்வளவு சம்பளம் வாங்கினார் என்ற தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகர் கமல்
தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் கமல்ஹாசன்.
இவர் தற்போது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் “இந்தியன் 2” திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.
சினிமா மட்டுமல்ல தொலைக்காட்சி நிகழ்ச்சி, அரசியலிலும் மிகவும் முனைப்புடனும் செயல்பட்டு வருகிறார்.
அந்த வகையில், பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியை விரைவில் தொகுத்து வழங்கவுள்ளார். இதற்கான முதல் ப்ரோமோ நேற்றைய தினம் வெளியாகியுள்ளது.
முதல் பட சம்பளம் எவ்வளவு தெரியுமா?
இந்த நிலையில், தற்போது இந்தியன் 2, கமல் 233, கல்கி, கமல் 234 ஆகிய திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கிறார். “கல்கி” என்ற படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளாராம். இதற்காக கமல் அவர்கள் 130 கோடி சம்பளம் வாங்கவுள்ளாராம்.
கோடிகளில் புரளும் கமல் அவர்கள் ஆரம்ப காலங்களில் எவ்வளவு சம்பளம் வாங்கினார் என தெரிந்தால் முதல் ஆக்கிடுவோம்.
அந்த வகையில், நடிகர் கமல், “களத்தூர் கண்ணம்மா” என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார். இந்த படத்திற்கு கமல் அவர்கள், ரூ. 500 சம்பளம் வாங்கியுள்ளாராம்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த இணையவாசிகள், “ கமலுக்கே இவ்வளவு தான் சம்பளமா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |