பிக்பாஸ் சீசன் 7 எப்போது? வெளியான கமலின் சம்பள ரகசியம்... சூப்பர் அப்டேட் இதோ
பிரபல ரிவியில் வருடா வருடம் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 7 இந்த வருடம் ஆரம்பமாக உள்ள நிலையில், இதுகுறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
பிக்பாஸ்
தமிழ் சின்னத்திரைகளில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் நடந்து வரும் நிலையில் மக்களை அதிகம் கவர்ந்த நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சியே.
கடந்த வருடம் வரை 6 சீசன்கள் முடிவடைந்த நிலையில் தற்போது மக்கள் 7வது சீசனுக்கு காத்துக் கொண்டிருக்கின்றனர். இதில் கலந்து கொள்ளும் பிரபலங்களும் சில நேரத்தில் தனது உண்மையான முகத்தை வெளியுலகிற்கு காட்டி ரசிகர்களால் வெறுக்கப்படுகின்றனர்.
ஆனால் சிலரோ மக்களின் மனதில் நீங்காத இடத்தினைப் பிடித்து செல்லப்பிள்ளையாக வலம் வருகின்றனர். அதிலும் இந்நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கும் கமல்ஹாசன், புத்தகம் படிக்க வைப்பது சுவாரசியமான நிகழ்வாக இருந்தது.
மேலும் பலரும் தான் படிக்காத பல அரிய புத்தகங்களையும் படிக்க முடிந்தது. அடுத்து வரப்போகும் சீசனும் எவ்வாறு இருக்கப்போகின்றது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகின்றது.
கமல்ஹாசன் ஒவ்வொரு சீசனிற்கும் பல கோடி சம்பளத்தை உயர்த்தி வரும் நிலையில், இந்த சீசனுக்கு 130 கோடிக்கு மேல் சம்பளம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 7 வரும் ஆகஸ்ட் மாதம் முதல் அல்லது இரண்டாவது வாரத்திற்குள் ஆரம்பமாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளதால், ரசிகர்கள் குஷியில் காணப்படுகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |