நடிகர் ஜெயம் ரவி விவாகரத்து செய்ய காரணம் இதுவா? உடையும் உண்மைகள்
நடிகர் ஜெயம் ரவி ஆர்த்தி தம்பதிகள் பிரிவதற்கு காரணம் என்ன என்பது தற்போது வெளியாகியுள்ளது.
ஜெயம் ரவி
நடிகர் ஜெயம் ரவி இன்று தனது 44வது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார். தமிழில் முன்னணி நடிகரான ஜெயம் ரவி முதன்முதலாக ஜெயம் படத்தில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தார்.
பின்பு பல படங்களில் நடித்த இவர், பொன்னியின் செல்வன் படத்தில் தனது நடிப்பினை தத்ரூபமாக நடித்து அசத்தினார்.
இவர் கல்லூரி படிக்கும் போது ஆர்த்தி என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில், அவரையே கடந்த 2009ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டார்.
முதலில் இந்தத் திருமணத்தில் ரவியின் வீட்டுக்கு இஷ்டமில்லை என்றாலும் ரவி உறுதியாக இருந்ததால் அவரையே திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் மூத்த மகன் டிக் டிக் டிக் என்ற படத்தில் நடித்திருந்தார்.
நன்றாக சென்று கொண்டிருந்த இவர்களின் திருமண வாழ்க்கையில் பிரச்சனை ஏற்பட்டு, இருவரும் பிரிவதாக நேற்றைய தினம் ஜெயம் ரவி அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தார்.
காரணம் என்ன?
ஆனால் ஆர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த முடிவு சுயமாக அவர் எடுத்த முடிவு என்றும் தனக்கு இதில் உடன்பாடு இல்லை என்று உண்மையை உடைத்தார்.
இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பம் எழுந்ததுடன், பல கேள்விகளையும் எழுப்பி வருகின்றனர். அந்த வகையில் இவர்களின் பிரிவிற்கு காரணத்தையும் யூகத்தின் அடிப்படையில் வெளியிட்டுள்ளனர்.
இவர்களின் விவகாரத்துக்கு காரணம், ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா என்றும் இவருக்கு சங்கர் என்ற வளர்ப்பு மகன் இருக்கிறாராம். சுஜாதா நடத்தி வரும் தயாரிப்பு நிறுவனத்தை அந்த வளர்ப்பு மகன்தான் நிர்வகித்து வருகிறாராம்.
ஆர்த்தியின் அம்மாவின் தயாரிப்பு நிறுவனத்தால் எடுக்கப்பட்ட படத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள நிலையில், படம் சரியாக ஓடவில்லையாம். இதனால் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு கடைசியில் பிரியும் அளவிற்கு வந்துள்ளதாம்.
ஆனால் சமூக வலைத்தளங்களில் இவர்களுடைய விவாகரத்திற்கு முக்கிய காரணம் ஈகோ தான் என்று பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |