Bigg Boss 10: பசியின் உச்சக்கட்டம்... கொதித்தெழுந்த முனியம்மாவின் அதிரடி ஆக்ஷன்
பிக் பாஸ் வீட்டில் கொடுக்கப்பட்ட புதிய டாஸ்க் காரணமாக போட்டியாளர்கள் சாப்பிடுவதற்கு உணவு இல்லாமல் தவித்து வருகின்றனர்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் புதிய டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டு போட்டியாளர்கள் இரண்டு அணியினராக பிரிந்து விளையாடி வருகின்றனர்.
பிக் பாஸ் வீடும் இரண்டு வீடு போன்று காணப்படுகின்றது. இதில் நேற்றைய தினம் ஊதா அணியினர் வெற்றி பெற்ற நிலையில், சிவப்பு அணியினருக்கு உணவு இல்லாமல் காணப்படுகின்றது.

உணவு இல்லாமல் பசியால் கஷ்டப்படும் அந்த அணியில் தான் முனியம்மாவும் இருந்து வருகின்றார். இந்நிலையில் அவரை வெறுப்பேற்றும் விதமாக தன்யா சாப்பிட்டுள்ளார்.
இதனால் கோபத்தில் வெகுண்டெழுந்த முனியம்மா அவரிடமிருந்து சாப்பாட்டை பிடுங்கியதுடன், சமையலறையில் உள்ள உணவையும் எடுத்துச் சென்றுள்ளார்.
ஆகையால் பிக்பாஸ் வீட்டிற்குள் சண்டை எழுந்துள்ளது. முனியம்மா பின்னால் வரும் பிரச்சனையை அடுத்து சமாளித்துக் கொள்ளலாம் என்று பயங்கரமாக சண்டையிட்டுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |