Siragadikka Aasai: முத்துவை நிரந்தரமாக பிரிந்துவிடுவாரா மீனா? கதையில் திடீர் மாற்றம்
சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா பணத்தை தர மறுத்துள்ள நிலையில், மனோஜிடம் ரோகினி பணம் கேட்டுள்ளார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சீரியலில் கதையும் மிகவும் சுவாரசியமாக சென்று வருகின்றது.
ஏற்கனவே திருமணமானதை மறைத்து வீட்டில் மூத்த மருமகளாக வலம்வரும் ரோகினி அடுத்தடுத்து உண்மையை தந்திரமாக மறைத்து வருகின்றார்.
தற்போது மனோஜ் ரோகினி இருவரும் சேர்ந்து மீண்டும் மீனா முத்துவை பிரித்துவிடுவதற்கு வாய்ப்பு இருப்பதாக கதை செல்கின்றது.“
முத்துவின் நண்பருக்கு பணம் கொடுப்பதற்கு மீனா மறுத்துள்ளார். மற்றொரு புறம் ரோகினி மனோஜிடம் தனக்கு ஒரு லட்சம் ரூபாய் வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் மீனா சேர்த்து வைத்த பணத்தை மனோஜ் எடுத்து ரோகினியிடம் கொடுத்துவிடுவாரா? இது தெரியாத மீனா முத்து தான் பணத்தை திருடிவிட்டார் என்று நினைத்து சண்டை போடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும் அவ்வாறு வாய்ப்பு ஏற்பட்டால் இதையே காரணம் காட்டி விஜயாவும் மீனாவை வீட்டைவிட்டு வெளியே அனுப்பிவிடுவார். தற்போதுள்ள கதைகளத்தினை அவதானித்த பார்வையாளர்கள் அடுத்து என்ன நடக்க போகின்றது என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |