பிரபல நடிகரின் வீட்டில் மர்ம மரணம்: தீவிர விசாரணையில் ஈடும் பொலிஸார்!
பிரபல நடிகர் ஒருவரின் வீட்டில் கார் ஓட்டுநர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துல்கர் சல்மான்
பிரபல மலையாள நடிகரான துல்கர் சல்மான் தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். இவர் மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் மம்மூட்டியின் மகனாவார்.
துல்கர் சல்மான் படங்களுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அந்த வகையில் அண்மையில் வெளியான சீதா ராம் திரைப்படம் அவரின் திரைத்துறைக்கு திருப்புமுனையாக அமைந்தது.
மர்ம மரணம்
துல்கர் சல்மான் வீட்டின் வடபழனியைச் சேர்ந்த பாஸ்கர் என்ற கார் ஓட்டுநர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
இன்று துல்கர் சல்மானை விமான நிலையத்திற்கு அழைத்துச் வரவுள்ளதால் நேற்று இரவு பீட்சா மற்றும் கோக் என்பவற்றை ஒன்லைனில் ஒர்டர் செய்து சாப்பிட்டு விட்டு வீட்டிலேயே தங்கியுள்ளார்.
உறங்கிக் கொண்டிருந்த பாஸ்கருக்கு மூச்சுத்திணரல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.
பாஸ்கரை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தை தொடர்ந்து பொலிஸார் வழக்குப் பதிவு செய்து மரணத்திற்கான காரணம் என்ன என்பதை பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.